Timeless

அப்பாடா ஒரு வழியா இந்த அரியவகை உயிரினம் தப்பித்தது! கொஞ்சம் மிஸ் பண்ணியிருந்தாலும் இந்நேரம் அது பிரியாணி ஆகியிருக்கும்!

Jun 05 2021 06:58:00 PM

உலகில் மிகவும் அரிதான விலங்குகள் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கின்றது. அதுவும் நம் கண்களில் தென்படுவது என்பது மிக அபூர்வமான விஷயமாகும். ஏனென்றால் பெரும்பாலான அரியவகை உயிரினங்கள் யாவும் கடலுக்குள் இருப்பதால் எப்போதாவது தான் நாம் பார்க்க முடியும். அந்த வகையில் சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் உள்ள மீன் கடை ஒன்றில் சில அரியவகை நண்டுகள் காப்பாற்றப்பட்டுள்ளது.

orange-crab england-fish-shop

சமையல் நிபுணர் ஒருவர் இங்கிலாந்தில் உள்ள லெய்செஸ்டர் நகரில் ஒரு மீன் கடைக்கு சென்றுள்ளார். அந்த கடையில் மீன்களும் நண்டுகளும் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்தக்கடையில் நுழைந்த அவருக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. மீன்களை பார்த்துக்கொண்டிருந்த அவருடைய கண்களுக்கு வித்தியாசமான சில நண்டுகள் தென்பட்டது. கண்ணாடி குடுவைக்குள் இருந்த அந்த நண்டுகளை அவர் உற்று நோக்கிய பிறகு தான் அவருக்கு விஷயம் புரிந்தது.

orange-crab england-fish-shop

அந்த கண்ணாடி குடுவைக்குள் இருந்த இரண்டு நண்டுகள் மற்ற நண்டுகளை போல் அல்லாமல் வித்தியாசமான ஆரஞ்சு நிறத்தில் காணப்பட்டது. இவர் ஒரு சமையல் நிபுணராக இருந்ததாலும் மீன்கள் மற்றும் நண்டுகளை பிடிப்பதில் 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் இருந்ததாலும் இது அரியவகை நண்டு என்று இவர் கண்டுபிடித்தார். இதை சில அனுபவம் மிக்க மீனவர்களிடமும் கேட்டு உறுதி படுத்திக்கொண்டார்.

orange-crab england-fish-shop

1 கோடி நண்டுகளில் ஒன்றிரண்டு மட்டுமே இப்படி இருக்கும் என்று கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இது மிகவும் அரிதான நண்டு என்பதை தெரிந்து கொண்டு கடைக்காரரிடம் சென்று அதை விற்பனை செய்ய வேண்டாம் என்று கூறி அதற்கான முழு தொகையையும் செலுத்தி வாங்கிய அந்த சமையல் நிபுணர் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் இங்கிலாந்து நாட்டின் கடல்வாழ் உயிரினத்துறையிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளார். ஜோசப் என்ற அந்த சமையல் நிபுணரின் இந்த செயலுக்கு கடல்வாழ் உயிரின பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள், அரியவகை விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் அனைவரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.