ஊட்டி ரயில்ல போறதுக்கு 2.25 இலட்சம் யாராவது கொடுப்பாங்களா ? நீங்க போவிங்களா?
  • 17:06PM Nov 22,2018 Ooty
  • Written By AR
  • Written By AR
  • 17:06PM Nov 22,2018 Ooty

மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை செல்லும் மலை ரயில் பயணத்திற்காக இங்கிலாந்தில் இருந்து 7 சுற்றுலா பயணிகள். 2.25 இலட்சம் கொடுத்து புதன்கிழமை அன்று பயணித்துள்ளனர்.

Related imageஇந்தியன் ரயில்வே மூலம் தனி சிறப்பு மலை ரயில் வசதி சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த பயணத்திற்கு மொத்த இருக்கைகளையும் முன் பதிவு செய்திட 2.25 இலட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் இந்தியன் ரயில்வே நிறுவனத்திற்கு நல்ல வருவாய் ஏற்பட்டுள்ளது. இந்த சேவையை இதற்கு முன்னர் தேனிலவு கொண்டாடும் ஜோடி ஒருமுறை சென்றுள்ளனர். அதன் பின் தற்போது இங்கிலாந்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 7பேர் இதில் சென்றுள்ளனர் காலை 9மணிக்கு எடுக்கப்படும் ரயில் மதியம் 3 மணிக்கு ஊட்டி சென்றடையும் இவர்களுடன் ரயில்வே துறை அதிகாரி ஒருவர் வழிகாட்டியாகவும் பயணிகளுக்கு ரயிலின் குறிப்பு கையேடுகளும் நினைவு பரிசுகளும் கொடுக்கப்பட்டது. அவர்கள் இந்த பயணத்தை மிகவும் சந்தோசமாக கொண்டாடி சென்றனர்.

Share This Story

You Might Also Like These
Related Stories
Top