Misc

இப்படி எல்லாமா ஏமாற்றுவார்கள்? முதலீடு செய்ய நீங்க தயாராக இருந்தால் உங்களுக்கு மொட்டை அடிக்க ஆள் ரெடியா இருக்காங்க பாஸ்!

Apr 23 2021 01:15:00 PM

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒரு தொழில் வேகமாக பரவியது. அதாவது முதலில் நாம் ஒரு குறிப்பிட்ட பணத்தை முதலீடு செய்ய வேண்டும். பின்னர் நமக்கு கீழே ஆள் சேர்க்க வேண்டும். எவ்வளவு ஆட்கள் சேர்க்கிறோமோ அதற்கு ஏற்றபடி நமக்கு பணம் கிடைத்துக் கொண்டே இருக்கும். இந்த தொழில் ஆரம்பமான புதிதில் சேர்ந்தவர்கள் நிறைய சம்பாதித்தார்கள். அது உண்மை தான். ஆனால் முதலில் அவர்கள் மிகக்குறைந்த பணமே முதலீடு செய்தார்கள். ஒரு வருடத்தில் நிறைய பணம் வருகிறது என்று தெரிந்தவுடன் நிறைய பணம் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள்.

online investment job tamilnadu india

தங்களுக்கு கீழே இருக்கும் ஆட்களையும் நிறைய பணம் முதலீடு செய்யச் சொன்னார்கள். அப்போதுதான் அந்த டுபாக்கூர் கம்பெனி தங்கள் வேலையை காட்டத் தொடங்கினார்கள். எல்லாப் பணத்தையும் எடுத்துக் கொண்டு கம்பெனியை மூடி விட்டார்கள். இது நாம் அனைவரும் தெரிந்த ஒரு விஷயம் தான். ஆனால் இப்போ ஆன்லைனில் இதுபோன்ற நிறைய கம்பெனிகள் ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் சொல்லும் ஒரு காரணம் கொ ரோனா காலத்தில் மக்களுக்கு உதவ வேண்டும் என்பது தான். இதுபோன்ற செயலிகளில் முதலில் 500 ரூபாய் முதலீடு செய்யச் சொல்வார்கள்.

online investment job tamilnadu india

பின்னர் நாம் 10 நாட்களுக்கு பிறகு அந்த 500 ரூபாயை எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்வார்கள். இதே போல ஒரு 2500 ரூபாய் வரை நாம் சம்பாதித்து விடலாம். அப்போது அவர்கள் நமக்கு கொடுக்கும் offer அருமையாக இருக்கும். 50000 முதலீடு செய்யுங்கள், தினமும் 5000 சம்பாதிக்கலாம் என்று. நாமும் நமக்கு தெரிந்த நண்பர்கள் அனைவரையும் அதில் சேர்த்துவிட்டு சம்பாதிக்க ஆரம்பிப்போம். எப்போது உங்களது முதலீடு அதிகமாக செல்கிறதோ, எப்போது எல்லோரும் உங்களைப் போன்று நிறைய முதலீடு செய்ய ஆரம்பிக்கிறார்களோ அப்போதே அவர்கள் தங்கள் கடையை சாத்திவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

online investment job tamilnadu india

எனது நண்பர்கள் கூட இதுபோன்ற செயலிகளை நம்பி நிறைய பணத்தை ஏ மாந்து விட்டார்கள். எனவே இதுபோல இனி யாரும் உங்களை முதலீடு செய்யச் சொன்னால் ஒன்றுக்கு நூறு முறை யோசித்து செயல்படுவதே சிறந்தது.

online investment job tamilnadu india