#Onion marriage : வெங்காயத்தில் முளைப்பு வந்தால் தான் கல்யாணமா.? படபடக்கும் மாப்பிள்ளைகள் : தினுசு தினுசா கிளம்புதே ராசா.!
  • 10:21AM Jun 14,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 10:21AM Jun 14,2019 India

அந்த காலத்துல நம்ம ஊருல கல்யாணம் நடக்கணும்னா வட்ட கல் தூக்கணும், காளைய அடக்கணும்னு சொன்ன மாதிரி ஒவ்வொரு ஊருலயும் ஒவ்வொரு மாதிரி போட்டி வெச்சு தான் மாப்பிள்ளை தேர்வு நடந்துருக்கு. இருக்கறதுலயே வீரமான போட்டி வெச்சு அதுல ஜெயிக்கிற பசங்களுக்கு பொண்ணு கொடுத்தது நம்ம ஊரா தான் இருக்கும். மத்த நாட்டுல எல்லாம் சில சிரிப்பு வர மாதிரி போட்டிகள் வெச்சு அதுல ஜெயிக்கிற பசங்களுக்கு பொண்ணு கொடுத்துருக்காங்க.

ஒரு வீர விளையாட்டு கல்யாணத்த தீர்மானிக்குது சரி. ஒரு வெங்காயம் நால கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா..? கேக்கவே ஆச்சர்யமா இருக்கா..? அதும் நடந்துருக்க ஒரு நாட்டுல. சமையலுக்கு பயன்படுத்துற வெங்காயத்துக்கு இவ்வளவு பவரான்னு நினச்சு பாத்தா, போட்டி ரொம்பவே சிம்பிளா தான் இருக்கு. கடைசியில பாத்தா அட இவ்வளவு தானா விசயம்னு உப்பு, சப்பு இல்லாம முடிஞ்சு போகுது இந்த போட்டி. இத நம்பியும் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்துருக்காங்க.

அமெரிக்கவுல இருக்க பழங்குடியின மக்களுக்கு வெங்காயத்து மேல ரொம்ப நம்பிக்க அதிகமாமா. ஒரு பெண்ணுக்கு பல மாப்பிள்ளை போட்டிக்கு வந்தா, இந்த வெங்காயத்த வெச்சே மாப்பிள்ளை யாருன்னு முடிவு பண்ணி இருக்காங்க. அதுல யார் பொருத்தமான மாப்பிள்ளைன்னு தெரிஞ்சிருமாம். இந்த நடைமுறை எல்லா கல்யாணத்துக்கும் இல்ல, எந்த பொண்ணுக்கு போட்டி அதிகமா இருக்கோ, அந்த பொண்ண கட்டிக்க வர மாப்பிள்ளைகளுக்கு மட்டும் நடக்குமாம்.

யார் யாரெல்லாம் பொண்ண கட்டிக்க விரும்புறாங்களோ அவங்க பெயரை எல்லாம் வெங்காயத்துக்கு மேல எழுதுவாங்க. அந்த வெங்காயத்த பத்திரமா எடுத்து குளிர்ச்சியா, இருட்டா இருக்க ஒரு ரூம்ல மூடி வெச்சிருவாங்க. இதுல எந்த வெங்காயத்துல முதல்ல முளைப்பு வருதோ, அதுல பேரு எழுதிருக்க மாப்பிள்ளைக்கு பொண்ண கட்டி கொடுத்துருவாங்களாமா. இந்த மாதிரி நிறைய நிறைய வித்தியாசமான கல்யாண போட்டி இன்னும் உலகம் பூராவும் பரவி இருக்கு.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top