#Gossip : அற்பனுக்கு பகுசி வந்தால் ஆடி கார் தான் கேட்பாராம்!!!
  • 10:59AM Dec 10,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 10:59AM Dec 10,2019 Tamil Nadu

தமிழ் திரையுலகை பொறுத்தவரை ஆணவத்தால் அழிந்தவர்கள் பலர்,அப்படி ஒரு நாயகனை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்,தமிழ் சினிமாவை பொறுத்தவரை திறமை இருந்தால் கதாநாயகனாக ஜொலிக்கலாம் அழகு என்பது இரண்டாம் பட்சமாக தான் பார்க்கப்படுகிறது,அப்படி தனது திறமையின் முலமாக  முன்னணி நாயகனாக ஜொலிப்பவர் தான் அந்த நடிகர்,இந்த நடிகர் குறித்து சமீபத்தில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுஇவரும் இப்படியா என்று என்னும்படியுள்ளது.

audi.jpg

இவர் மீது கிசு கிசுகளுக்கு பஞ்சமில்லை  ஆனாலும் தொழிலில் நேர்மையாக இருந்தார்  படப்பிடிப்பிற்கு கச்சிதமாக வந்துவிடுவது, தயாரிப்பாளர்களுக்கு எந்த வித வீண் செலவும் வைக்காதது என திரைத்துறையினர் பாராட்டும் ஒருவராகவே இருந்து வந்தார்.ஆனால் சமீபகாலமாக, நடிகரின் நடவடிக்கை அப்படியே தலைகீழாக மாறிவிட்டதாம்.

audi 1.jpg

படப்பிடிப்பு பக்கத்துக்கு தெருவில் இருந்தால் கூட, பில்டப் கொடுக்கும் நோக்கத்தோடு, ஆடம்பரமான ஆடி கார் தான் வேண்டுமென அடம்பிடிக்கிறாராம்.இதனால் தயாரிப்பாளருக்கு பல லட்சங்கள் வீண் செலவு வைத்து, தயாரிப்பாளர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிகட்டி கொண்டிருக்கிறார். மேலும் முன்பெல்லாம் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு  முன்னதாக தயாராக வந்து நிற்பவர்,தற்பொழுது பல மணி நேரம் தாமதமாக வருகிறாராம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top