#OCS: பிறந்ததுல இருந்து இந்த விஷயம் நமக்கு தெரியாம போச்சே - இலவசமா கிடச்சா ஏன் "ஓசி"ல கிடைச்சுதுனு சொல்றாங்க தெரியுமா.?
  • 19:46PM Jun 07,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 19:46PM Jun 07,2019 India

பொதுவாவே 90s கிட்ஸ் இந்த வார்த்தையா அதிகமா யூஸ் பண்ணி இருப்பாங்க. ஏதாச்சும் காசு கொடுக்காம இலவசமா கிடச்சா 'உனக்கு எல்லாமே ஓசியில கிடைக்குதுனு சொல்லுவாங்க. இந்த ஓசி வார்த்தை எங்க இருந்து வந்துச்சு. அதுக்கு என்ன அர்த்தம்னு இன்னும் பல பேருக்கு தெரியாம இருக்கு.

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆட்சி செய்த போது தபால் துறை அறிமுகப்படுத்தி இருக்காங்க. இப்போது இருப்பது போலவே அப்போதும் தபால் உறையில் தபால் தலை ஒட்டும் வழக்கம் இருந்துருக்கு. அந்த தபால் தலைக்கு கட்டணம் உண்டு. ஆனால் கம்பெனி தொடர்பான தபால்களை இலவசமாக அனுப்ப தபாலின் உறையில் OCS (on company service) என்று சுருக்கமாக எழுதி அனுப்புவார்கள்.

இதுவே நாளடைவில் நம் வாழ்க்கையில் இரட்டுறகலந்து OCS என்பது OC ஆக மருவி போனது. பின் இலவசம் என்பதற்கு ஓசி என்ற பெயரும் நிலைத்துப் போனது. இன்று காரணம் தெரியாமலே பெரும்பாலான மக்கள் இலவசம் என்பதற்கு ஓசி என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர்.

இப்போ கூட பல அரசியல் பிரபலங்களை ஓசி சோறு, ஓசி பிரியாணினு சொல்லி சமூக வலைதளங்களில் விமர்சித்து வறாங்க. அன்னைக்கு தொடங்கி, இப்போ வரைக்கும் அந்த ஒரு வார்த்தை மட்டும் அழியாம அப்படியே நம்ம தமிழ் மக்களோட பேச்சு வழக்குல கலந்துருச்சு. இந்த மாதிரி இன்னும் நிறைய வார்த்தை ஆங்கிலேயர்கள் விட்டுட்டு போனத நமக்கே தெரியாம பயன்படுத்திக்கிட்டு வரோம்.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top