ஒலிம்பிக்ஸ் – The Untold Story
  • 10:49AM Dec 05,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 10:49AM Dec 05,2017 Chennai, Tamil Nadu 600003, India

இன்று உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் தங்கள் விளையாட்டு திறமையை நிரூபிக்கும் இடமாக இருப்பது ஒலிம்பிக்ஸ் போட்டிகளாகும்.நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடை பெரும் இந்தப் போட்டிகளில் வெற்றிபெறுவதைக் கௌரவமாக கருதினர்.அந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்கப் படத்திற்கான வினோத வரலாற்றை பற்றி பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

ஒலிம்பிக்ஸ் வரலாறு:

கிரேக்க நாகரீகம் வளந்து கொண்டிருந்த காலகட்டத்தில் மக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.அத்தகைய விழாக்களில் ஒன்றுதான் இன்றைக்கும் தொடர்கிற ஒலிம்பிக்ஸ் போட்டிகள்.

ஒலிம்பிக்ஸ், விளையாட்டுகளின் திருவிழாவாக கருதினர்.ஒலிம்பஸ் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒலிம்பியா நகரில் நடைபெற்றது.முதலில் ஒவ்வொரு ஆண்டும் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் காலப்போக்கில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கமாயிற்று.

போட்டிக்கான காரணம்:

கடவுளுக்கும் மனிதனுக்கும்  உள்ள பலத்தை சோதிக்கும் வகையில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டது.கிரீஸின் அணைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் ஒலிம்பியா நகருக்கு வந்து தங்கள் திறமையை நிரூபிக்கும் விதமாகப் பல போட்டிகளை நடத்தி வந்தனர்.இவையே காலப்போக்கில் ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற்றுள்ள போட்டிகளாக உருபெற்றது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top