Exquisite

என்னங்க சொல்லறீங்க? ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தி இப்படி ஒரு பரிசு பெறுவது சாத்தியமா?

Apr 18 2021 07:57:00 PM

ஒலிம்பிக் போட்டிகளின் வரலாறு மிகவும் வியக்கத்தக்கதாகும். அதில் ஏகப்பட்ட சுவாரசியமான சம்பவங்கள் நிறைந்துள்ளன. அதில் ஒரு சம்பவம் தான் இது.

olympic-tennis-gold

1896-ம் ஆண்டில் நடைபெற்ற முதல் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்றவர் தான் ஜான் போலண்ட். இதில் வேடிக்கை என்னவென்றால் இவர் ஒரு விளையாட்டு வீரரே கிடையாது. அப்புறம் எப்படி தங்கப்பதக்கம் வாங்கினார் என்று குழப்பமாக இருக்கிறதல்லவா? ஜான் போலண்ட் எப்போதும் தனது நண்பர்களுடன் டென்னிஸ் விளையாடுவது வழக்கம்.

olympic-tennis-gold

முதன் முறையாக சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற சமயத்தில் அவர் கல்லூரியில் படித்து கொண்டிருந்தார். ஒலிம்பிக் போட்டியை நேரில் காண்பதற்காக ஆவலுடன் சென்றார். அங்குள்ள ஒரு இடத்தில் உணவு அருந்திக்கொண்டிருக்கும் போது தான் டென்னிஸ் விளையாட அதிகம் பேர் இல்லை என்ற தகவல் கிடைத்தது.எனவே தன்னுடைய பெயரை போட்டியில் கலந்து கொள்வதற்காக விளையாட்டாக பதிவு செய்தார் ஜான் போலாண்ட். யாரும் எதிர்பாராத வகையில் ஆண்களுக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு இரண்டிலும் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். யாரும் எதிர்பாராத இந்த நிகழ்வு ஜான் போலாண்ட்டுக்கும் பெரிய இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.