Misc

இத்தனை கோடி மக்கள் தொகை இருந்தும் நம் இந்தியாவால் ஏன் ஒலிம்பிக்கில் அதிக தங்கம் வாங்க முடிவதில்லை?

Jul 26 2021 01:27:00 PM

நம்ம நாட்டின் மக்கள் தொகை 130 கோடிக்கு மேல் சென்றுவிட்டது. இவ்வளவு மக்கள் தொகை இருந்தும் நம் இந்தியாவால் அதிக மெடல்களை ஓலிம்பிக்கில் வாங்க முடிவதில்லை. நம்மை விட சிறிய நாடுகள் கூட கோப்பை பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன. இதற்கு காரணம் என்ன? அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் தங்கள் பிள்ளைகளின் படிப்பில் எந்த அளவுக்கு ஆர்வம் காண்பிக்கிறார்களோ அதேபோல விளையாட்டிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

olympic india gold

அமெரிக்காவில் பேஸ்கட் பால் மைதானம் இல்லாத பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொல்லலாம். நம்ம இந்தியாவில் ஒரு மாவட்டத்திற்கே 5 முதல் 10 பேஸ்கட் பால் மைதானங்கள் தான் இருக்கும். அமெரிக்காவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆரம்பம் முதலே குழந்தைகளை விளையாட்டில் ஈடுபடுத்துவார்கள்.

olympic india gold

சீனா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் கூட 4 வயது முதலே ஒலிம்பிக்கில் தங்கம் ஜெயிக்க வேண்டும் என்று விளையாட்டை குழந்தைகளின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இடம்பெற செய்வார்கள். நம்ம நாட்டில் மட்டும் தான் எல்லா இடங்களிலும் ஊ*ழல் தலைவிரித்து ஆடுவதால் தரமான வீரர்கள் யாரும் இந்திய அளவில் இடம்பெற முடிவதில்லை.

olympic india gold

ஒரு பையன் தனது சின்ன வயசில் இருந்தே விளையாட்டில் ஆர்வமாக இருந்தாலும் நீ ஏன் எப்போ பாத்தாலும் விளையாண்டுக்கிட்டே இருக்க? அந்த விளையாட்டு உனக்கு சோறு போடாது. அதெல்லாம் பணக்காரங்க மட்டும் தான் விளையாட முடியும். நம்மள மாதிரி நடுத்தர மக்களும், ஏ*ழை மக்களும் வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும் என்று சொல்லி வளர்க்கிறார்கள்.

olympic india gold

உண்மையில் நம்ம நாட்டின் நிலையும் மக்கள் நினைக்கும்படி தான் இருக்கிறது. திறமையான வீரர்கள் குறைந்த அளவில் தான் விளையாட்டில் கலந்து கொள்கிறார்கள். தங்களுடைய வ*றுமை காரணமாக தங்களின் கனவை இளமையிலேயே பு*தைத்து விடுகிறார்கள். பணம் உள்ளவர்கள் மட்டும் தான் தேசிய அணியிலும், உலக அளவிலும் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள். இந்த நிலை மற்ற நாடுகளில் சுத்தமாக இருப்பதில்லை. இந்த நிலை நம் இந்தியாவில் மாறினால் மட்டும்தான் நாமும் மற்ற நாடுகளைப் போல பதக்கப் பட்டியலில் முன்னிலை பெற முடியும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

olympic india gold