இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த தேவாலயங்கள்
  • 12:30PM Nov 16,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 12:30PM Nov 16,2017 Chennai, Tamil Nadu 600003, India

நம் இந்தியா நாட்டில் மக்களால் அதிகம் வழிபடும் மூன்றாவது மாதமாக இருப்பது கிறிஸ்துவமதமாகும்.! 52 கி.பி முதல் இன்று வரை நம் நாட்டில் பலர் கிறிஸ்துவ மதத்தை வழிப்பட்டு வருகின்றனர்.! இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் பொழுது பல பேராலயங்கள் இந்தியா-மேற்கத்திய முறையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.! இந்தியாவில்அப்படிப்பட்ட பழமையான சில தேவாலயங்களைப் பற்றி பார்ப்போம்.!

 

1.செயிண்ட். தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க திருச்சபை,பாலையூர்

Image result for St. Thomas Syro-Malabar Catholic Church, Palayoor hd images

 

  கி.பி 52 பொழுது செயின்ட் தாமஸ்,கிறிஸ்துவ அறநெறிகளைப் போதிக்க தென்னிந்தியாவிற்கு வந்தடைந்தார்..அப்பொழுது அவரால் இங்கு இந்தத் தேவாலயம் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.இது அவர் அப்பொழுது கட்டிய 7 தேவாலயங்களில் ஒன்றாகும்.இந்தியாவில் உள்ள பழமைவாய்ந்த தேவாலயங்களில் இதுவும் ஒன்று.!

 

 

2.வல்லற்படம் சர்ச்,கொச்சி

Image result for Vallarpadam Church, Kochi

 அன்னை மேரி மாதாவிற்காகக் கட்டப்பட்ட இந்தத் தேவாலயம் 1524 ஆண்டில் போர்ச்சுகல் வியாபாரிகளால் தொடங்கப்பட்டது பின்பு 1676 ஆண்டில் வந்த வெள்ளத்தில் பேராலயம் சிதைந்தது.அதன் பின் பலியாத்  ராமன்  வழிச்சான் என்பவரால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.!

 

 

3.இம்மாகுலேட் கன்செபஸ் கதீட்ரல், பாண்டிச்சேரி

Related image

 

பிரெஞ்சுக்காரர்களால் மேரி மாதாவிற்காகக் கட்டப்பட்ட இந்தப் பேராலயம் மூன்று முறை சிதைக்கப்பட்டது.பின்பு 1770 ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.!அன்றில் இருந்து இன்று வரை 300 வருட காலமாக இங்கு பிரார்த்தனைகள் நடைபெற்றுவருகிறது.!

 

3.புனித ரோசரி பசிலிக்கா, பந்தல்

Related image

 

மேற்கு வங்காளத்தில் உள்ள பழமை வாய்ந்த தேவாலயம் இது.,1660 ஆண்டு கோமஸ் டி சோட்டோ இந்தத் தேவாலயத்தை மறுகட்டமைப்பு செய்தார்.

 

5.செயின்ட் பிரான்சிஸ் சர்ச், கொச்சி

Image result for st francis church kochi

 

 1503 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் இந்தியாவின் பழமையான ஐரோப்பிய தேவாலயமாகும்.! வாஸ்கோ டா காமா கொச்சியில் இறந்த பொழுது இங்கு இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.,பின்பு 14 வருடம் கழித்து மீதம் இருந்த அவரின் உடல் பாகங்கள் லிஸ்போனிற்கு கொண்டு செல்லப்பட்டது.!

 

6.சாண்டா குரூஸ் கதீட்ரல் பசிலிக்கா, கொச்சி

 

Image result for Santa Cruz Basilica, Kochi

  போர்ச்சுகல் மக்களால்  கட்டப்பட்ட இந்தப் பேராலயம் டச்சு வீரர்களால் அழிக்கப்பட்டது.பின்பு பிரிட்டிஷ் ராஜ்யத்தின் பொழுது இது முழுவதுமாக இடித்து மீண்டும் புதிதாக கட்டப்பட்டது.!

 

 

7.புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்,வேளாங்கண்ணி

Image result for velankanni matha church images

 

  வேளாங்கண்ணி கடற்கரை ஓரமாக இருக்கும் இந்தத் தேவாலயம் உலகமக்களால் அதிகம் வந்து செல்லப்படும் இடமாகும்.! ஆரோக்கிய அன்னை பல உண்மை அதிசயங்கள் நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது.!

 

 

 

8.செயின்ட் மேரி சர்ச், சென்னை

Related image

 

 1639 ஆம் ஆண்டு மெட்ராஸ் தோன்றிய பொழுது அங்கு இருந்த ஆங்கிலேயர்களின் பிரார்த்தனைக்காக இந்தத் தேவாலயம் கட்டப்பட்டது.! 1678 ஆண்டு இந்தத் தேவாலயம் கட்டத் தொடங்கப்பட்டது,அன்றைய நாளை "லேடி டே" என்று குறிப்பிடுகின்றனர்.இதன் காரணமாக   இந்தத் தேவாலயத்திற்கு "லேடி மேரிஸ் சர்ச்" என்றும் அழைப்பார்கள்.!

 

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top