Exquisite

எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோமே! உங்கள சொல்லி என்ன பிரயோஜனம்? எது நடக்கணுமோ அது நடந்தே தீரும்!

Jun 07 2021 06:53:00 PM

கிரிக்கெட் விளையாட்டில் ஒரு காலத்தில் மிகப்பெரிய அணியாக விளங்கியது ஜிம்பாப்வே. பலமுறை உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கே சவால் விடும் வகையில் திறமை வாய்ந்த வீரர்களை தன்னிடத்தில் கொண்டிருந்தது. Heath streak, Andy Flower, Grant Flower, Ervine போன்ற ஜாம்பவான்கள் இருந்தவரை அசுர பலத்துடன் இருந்தது ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி.

zimbabwe-cricket-team andy-flower grant-flower heath-streak

அந்தக்காலத்தில் ஆஸ்திரேலியாவிலும் பிரெட்லீ, பிராக்கென், மெக்ராத், வார்னே, பாண்டிங், மார்ட்டின், சைமண்ட்ஸ், கில்கிறிஸ்ட், ஹேடன் போன்ற மிகச்சிறப்பான வீரர்கள் விளையாடினர். இப்படிப்பட்ட ஆஸ்திரேலியா அணிக்கே தண்ணி காட்டும் அளவுக்கு விளையாடி வந்தது ஜிம்பாப்வே. உலகக்கோப்பை போட்டிகளில் கூட நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது ஜிம்பாப்வே. ஒரு சில போட்டிகளில் சில பெரிய அணிகளை வீழ்த்தி அ திர்ச்சியும் அளித்துள்ளது.

zimbabwe-cricket-team andy-flower grant-flower heath-streak

ஒரு சில ஆண்டுகள் நல்ல அணியாக வலம் வந்தாலும் அந்த அணியால் பெரிய அளவில் நீண்ட காலம் சோபிக்க முடியவில்லை. சீனியர் வீரர்கள் ஒவ்வொருவராக விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றதும் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பிறகு வந்த புது வீரர்கள் எவரும் பெரிதாக சாதனையோ சிறப்பாக சொல்லிக்கொள்ளும்படியாக ஆட்டங்களையோ வெளிப்படுத்தவில்லை. இதன் காரணமாக ஒரு காலத்தில் வலுவான அணியாக திகழ்ந்த ஜிம்பாப்வே காலப்போக்கில் டம்மி அணியாக மாறிவிட்டது. 90களின் இறுதியில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த ஜிம்பாப்வே இப்போது பிஞ்சு போன பலூன் மாதிரி மாறிவிட்டது.

zimbabwe-cricket-team andy-flower grant-flower heath-streak

கிரிக்கெட் விளையாட்டை ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் விளையாடுவதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் மீண்டும் நல்ல திறமையான வீரர்களை கண்டறிந்து சர்வதேச அளவில் விளையாட வைத்து பழைய ஜிம்பாப்வே அணியை மீட்டெடுக்க முடியும்.