#RIPSujith: குழந்தை எப்போது இறந்தது, வெளியானது பிரேத பரிசோதனை ரிப்போர்ட்! கைகள் சிதைந்த நிலையில் உடல் மீட்பு!
  • 09:05AM Oct 29,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 09:05AM Oct 29,2019 Chennai

மணப்பாறை அருகே வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நிகழ்வு மாநிலத்தையே பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. வெள்ளி அன்று  மாலை 5.40 மணிக்கு கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பற்ற 82 மணி நேரமாக மீட்பு பணி  தீவிரமாக நடைபெற்றது. விடிய விடிய நடந்த மீட்பு பணியில் கயிறு கட்டி காப்பாற்றும் முயற்சி தோல்வி அடைந்தது. அதனையடுத்து ரிக் இயந்திரம் கொண்டு மீட்கும் பணி தீவிரமடைந்தது. 100 அடி ஆழத்திற்கு குழந்தை சென்றதால் குழந்தையின் சத்தம் கேட்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. ஆயினும்  நம்பிக்கை தோய்வின்றி மீட்பு பணியினர் முயற்சியில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை 2.20 மணிக்கு வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த போது, நேற்று இரவு முதல் அழுகிய வாடை வருவதால் மீட்பு குழு ஆய்வு நடத்தியது. ஆய்வின்படி குழந்தையின் கைகள் சிதைந்த நிலையில்  உயிரோடுஇல்லை  என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நடந்த பிரதே பரிசோதனையில்,  வெளியான  அறிக்கையின் படி குழந்தை இறந்து மூன்று நாட்கள் இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Sujith 

#RIPSujith,  மேற்க்கண்ட காணொளியில் குழந்தை ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த ஒரு சில நிமிடங்களில் மீட்கப்படுகிறது. சீனர்களின் இந்த தொழில்நுட்பமும் துரித செயல்பாடும் இங்கு வருவதற்குள் எத்தனை சுஜித்களை இழக்கப்போகிறோமோ? 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top