டீன் ஏஜ் பிள்ளைகளைச் சொன்ன பேச்சைக் கேட்க வைப்பது எப்படி???
  • 08:09AM Sep 14,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 08:09AM Sep 14,2017 Chennai, Tamil Nadu 600003, India

பொதுவாகப் பிள்ளைகளை வளர்ப்பதே கடினமாக இருக்கும் இந்தக் காலத்தில் ஒவ்வொரு பெற்றோருக்கும் கதிகலங்கும் ஒரு பருவம் – அவர்கள் பிள்ளைகளின் டீன் ஏஜ்.  மீசை அரும்பவும், எதிர்பாலினத்தவரின் மீது ஈடுபாடும், ஈர்ப்பும் துவங்கும் இந்தக் காலகட்டத்தில் அவர்களது மனோநிலை என்பது குழந்தைத்தனமும் இல்லாமல், பெரிய மனிதத்தனமும் இல்லாமல் இருப்பது வாடிக்கை. இதன் காரணமாக அவர்களிடம் பெற்றோர்கள் வழக்கமாகப் பேசும் வார்த்தைகள் கூட அவர்களின் இந்தக் குழப்பத்தால், எதிர்மறை இயல்புகளை வளர்த்தும் என்பது யதார்த்தமான உண்மை.  கண்டித்தால் கோபம் வரும் பெரிய மனிதத்தனமும், கண்டு கொள்ளாமல் விட்டால் என் மேல் அன்பில்லை எனக் கோபம் கொள்ளும் குழந்தைத்தனமும் கலந்து பெற்றோருக்கு இவர்களை எவ்வாறு கையாள்வது என்பது புரியாமல் போவது வாடிக்கை.

எல்லாவற்றிற்கும் சரி. இவர்களை எப்படித்தான் நாம் சொன்ன பேச்சைக் கேட்க வைப்பது???

  1. பேச்சை ஆரம்பிக்கும் போது உங்களிடம் பேசுவது குழந்தையா அல்லது பெரியவனா என்பதை கவனிக்கவும்.  உதாரணத்திற்கு. மிகவும் பொறுப்பாகப் பேசினால், “உன் வயசுக்கு இதெல்லாம் எதுக்கு…” என்று மாற்றிப் பதிலளித்து விடாதீர்கள்.  அதே சமயம், செல்லம் கொஞ்சும் போது, “கழுதை வயசாச்சு…” போன்ற கமெண்டுகளைத் தவிர்க்கவும்.
  2. நண்பர்களுக்கும் சற்று மதிப்பளியுங்கள். அவன் வயது நண்பர்கள் வீட்டிற்கு வந்தால் அவனை நடத்துவதைப் போலவே அவன் நண்பனையும் நடத்துங்கள்.  வீட்டின் உள்ளே ஓரளவுக்கு மேல் பேசி விட முடியாது.  அதுவே உங்களுக்குப் பயந்து வெளியே சந்தித்துப்  பேசத் துவங்கினால் அவர்களை கண்காணிக்க முடியாது.
  3. பெரும்பாலும் இந்த வயதினர் எதிர்மறையாகச் செயல்படுவர்.  அதாவது, வேண்டாம் என்றால் வேண்டும், சரி என்றால் தப்பு என்று பேசத் துவங்கிவிடுவார்கள்.  அதுதான் உங்கள் cue வும் கூட. அவன் செய்ய வேண்டிய வேலையை அவன் முடியாது என்று சொல்லும் முன்னே நீங்கள் செய்யாதே என்று சொல்லுங்கள். ஆரம்பத்தில் குழும்பினாலும் அவன் மனம் நீங்கள் சொன்னதை அவன் செய்ததாக நினைவில் வைத்துக் கொள்ளும்.
  4. குழப்பத்தில் இருந்தால் அமைதியாக விடுங்கள்.  ஏதுவாக இருந்தாலும் நீங்கள் அவனை விட்டுக் கொடுக்காமல் இருங்கள். அதுவே அவனுக்கு நம் மீது நம்பிக்க கொடுக்கும்.
  5. வயதிற்கேற்ப குழப்பங்கள் ஏற்படும் வேளையில் அவை ஏன் ஏற்படுகின்றன என்பதைப் புரிய வையுங்கள்.  முடிந்தால் அவன் வயதில் நீங்கள் அடித்த கூத்தின் கதையையும் சொல்லுங்கள். Relate.

உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் எந்தளவுக்கு புரிதலுடன் இருக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு எளிது.  நண்பனாய் உங்களை ஏற்றுக் கொண்டால். உங்களுக்கு முழு மதிப்பெண் கொடுக்கலாம். ஏனெனில். உங்கள் பிள்ளை உங்கள் சொல் பேச்சை என்றும் மீறாது…

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top