Shoreline

இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு பெரிதாக ஒன்றும் யோசிக்கவில்லை! வெறும் பழத்தை அடிப்படை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டது இன்று உலகப்புகழ் பெற்றுவிட்டதே!

May 20 2021 07:20:00 PM

ஆஸ்திரேலியா தலைநகரான சிட்னியில் அமைந்துள்ள ஒபேரா கட்டிடம் உலகத்தின் மிகச்சிறந்த கட்டிடங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கட்டிடத்தை Jorn Utzon என்ற கட்டிடக்கலை நிபுணர் தான் வடிவமைத்துள்ளார். இதை கட்டுவதற்காக அவர் பெரிதாக எந்த டிசைனும் செய்யவில்லை. நாம் சாப்பிடும் சாதாரண ஆரஞ்சு பழத்தை அடிப்படையாக கொண்டு தான் இந்த ஒபேரா கட்டிடத்திற்கான டிசைனை உருவாக்கினார்.

uber-australia

உலகப்புகழ் பெற்ற இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் தேவைப்பட்டது. கடந்த 1973ம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த கட்டிடமானது அன்றிலிருந்து இன்று வரை பிரம்மாண்டமாக இருந்து வருகிறது. அந்த காலத்திலேயே இதை கட்டுவதற்கு 102 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர்கள் செலவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

uber-australia

சிட்னி நகரின் துறைமுகத்துக்கு அருகில் இந்த கட்டிடம் இருக்கிறது. வருடத்திற்கு கிட்டத்தட்ட 3 முதல் 4 லட்சம் சுற்றுலா பயணிகள் வரை இந்த ஒபேரா கட்டிடத்தை சுற்றிப்பார்க்க வருகை புரிவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேயாவில் உள்ள மிகவும் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாக சிட்னி ஒபேரா கட்டிடம் உள்ளது. கொரோனா அலைகள் ஓய்ந்த பிறகு சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த அற்புதமான கட்டிடத்தை நேரில் சென்று பாருங்கள். இது நிச்சயம் உங்களை வியப்படைய செய்யும்.

uber-australia