#NursesTikTokVideos பிறந்த குழந்தையை வைத்து டிக்டாக் வீடியோ செய்த ஒடிஷா நர்ஸ்! ஆத்திரத்தில் பெற்றோர், பதற்றத்தில் நோயாளிகள்!
  • 12:16PM Jun 27,2019 Malkangiri
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 12:16PM Jun 27,2019 Malkangiri

ஒடிஷா மாநிலத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையைத் தூக்கிவைத்து டிக்டாக் வீடியோ செய்த மூன்று நர்ஸ்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். திறமைக்கும் பொழுதுபோக்குக்காகவும் கொண்டுவரப்பட்ட டிக்டாக் செயலி தற்போது இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் ஆபத்தை உண்டாகி வருகிறது. புகழ் மற்றும் பிரபலத்திற்கு ஆசைப்பட்டு ஏகப்பட்டபேர் டிக்டாக் செயலியில் எக்குத்தப்பான விடியோக்களைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒடிஷா மாநிலத்தின் மல்காங்கிரி பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சில நர்ஸ்கள் வேலை நேரத்தில் டிக்டாக் வீடியோ செய்து சமூகவலைத்தளத்தில் பதிவித்துள்ளனர். அதிலும் ஒரு நர்ஸ் Special Neonatal Care Unit-ல் மருத்துவச் சீருடையில் நோயாளிகள் இருக்கும் இடத்தில் நின்று நடனமாடி டிக்டாக் வீடியோ எடுத்துள்ளார் மற்றொரு நர்ஸ் பச்சிளம் குழந்தையைத் தூக்கிவைத்துக் கொண்டு டிக்டாக் வீடியோ செய்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் குழந்தை இறப்பு அதிகம் கொண்ட இடமாக மல்காங்கிரி பகுதி உள்ளது. இங்கு நோயுடன் பிறக்கும் குழந்தைகளுக்காகத் தான் இந்த Special Neonatal Care Unit அமைக்கப்பட்டது. ஆனால் இந்த நர்ஸ்கள் SNCU அறையில் நின்று, அதுவும் குழந்தையைத் தூக்கிவைத்து டிக்டாக் வீடியோ செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்துப் பேசிய தலைமை மாவட்ட மருத்துவ அதிகாரி, வேலை நேரத்தில் நர்ஸ்கள் டிக்டாக் வீடியோ செய்திருப்பது அவர்களின் அலட்சியத்தையும், கவனக்குறைவையும் காட்டுகிறது. அந்த நர்ஸ்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் பொதுமக்கள் அந்த நர்ஸ்களைச் சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்று கூறி வருகின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top