#EB Bill: 1350 சதுர அடி வீட்டுக்கு கரண்ட் பில்லே இல்லையா? கன்னியாகுமரி விவசாயி கையாண்ட பலே ஐடியா!
  • 10:27AM Sep 24,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 10:27AM Sep 24,2019 Tamil Nadu

1350 சதுர அடி வீட்டில் வசிக்கும் விவசாயி பாலா சில நேரங்களில் மின் கட்டணமே செலுத்தியது கிடையாது என்று கூறுகிறார். அப்படீனா சோலார் போட்ருப்பாங்க என்று நீங்கள் யோசிக்கலாம். அதுவும் இல்லை. மின்சார வாரியத்தின் இணைப்பில் இருந்து தான் மின்சாரம் பெறுகிறார். அவர் வீட்டில் 9 குழல் விளக்குகள், 24 பல்புகள், 0.5 HP திறனுடைய மோட்டார், ஒரு குளிர்சாதனப் பெட்டி, 6 மின் விசிறிகள், இரண்டு மடிக்கணினி, மூன்று மொபைல், ஒரு ஐபேட், கிரைண்டர், மிக்ஸி, சிறிய Oven, இஸ்திரிப்பெட்டி என்று இத்தனை இருந்தும், இது எப்படி சாத்தியமானது என்று நினைக்கும் போது நமக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. வெறும் மின்சார சிக்கனம் என்ற ஒன்றுக்குள் இத்தனையும் சாத்தியப்படுத்தி இருக்கிறார் விவசாயி பாலா. இதற்கு அவர்கள் வீட்டில் என்னென்னே முயற்சிகள் மேற்கொண்டார்கள் என்பதை தெளிவாக விளக்குகிறார். அதனை பார்ப்பதற்கு முன்னால், அவர்கள் வீட்டின் கரண்ட் பில் அளவையும் பார்த்து விடுங்கள்.

 

#1. வீட்டில் பயன்படுத்தப்படும் பல்புகள் அனைத்தும் LED.

#2. மின்கட்டணம் அதிகமாகிவிட்டால் குடும்பத்தினருடன் பேசி மின்கட்டணத்தினைக் குறைக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

#3. தனி தனி அறை என்று போகாமல் அனைவரும் ஒரே அறையில் படுத்து உறங்குவதால் மின் விசிறியின் பயன்பாடு குறைகிறது.

#4. எல்லா அறைகளிலும் அகலமான இரண்டு ஜன்னல்கள் இருக்கிறது. இதனால் பகலில் அதிக வெளிச்சம் வீட்டினுள் இருப்பதால் பகலில் லைட் தேவையே இருக்காது.

#5. குடும்பமே ஒன்று சேர்ந்து ஒரே நேரத்தில் உணவு உண்பதால் மின் விசிறி மற்றும் மின் விளக்குகளின் பயன்பாடு குறைவாகவே இருக்கிறது.

#6. ஒரு அறையைவிட்டு வெளியேரினலே போது மின் சாதனங்களை அணைக்கும் பழக்கம் எல்லோரிடமும் இருக்கிறது.

#7. அடிக்கடி பிரிட்ஜ் திறப்பதில்லை. வீட்டிலுள்ள அனைவருக்கும் எந்தெந்த மின்சாதனங்கள் அதிக மின்சாரத்தினை உறிஞ்சும் என்ற விவரம் தெரிந்திருக்கிறது.

#8. மின்விசிறியை அடிக்கடி சுத்தம் செய்துவிடுவதால், தூசுகள் நீங்கி அதிக காற்றினைத் தருவதால் அதிக வேகத்தில் ஓடவிட வேண்டியதில்லை.

#EB Bill: இப்படியெல்லாம் செய்து வந்ததால், இந்த மாதம் அவர்களுக்கு கரண்ட்பில்லே இல்லையாம். கடந்த இரு மாதங்களில் மொத்தமே 100 யூனிட்டுகளுக்குக் குறைவாகவே பயன்படுத்தி இருக்கின்றனர். செம சூப்பர் குடும்பம். | என்றாவது உங்க ஹெட் போனை மாற்றி அணிந்திருக்கிறீர்களா? இது போன்ற குறியீடுகளை பார்த்தது உண்டா?

 

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top