#feminism: கண்ணாலயே கற்பழிக்காதீங்க! 10 மணி நேரம் பிரா அணியும் பெண்ணுக்கு என்ன நடக்கிறது தெரியுமா?
  • 14:58PM Oct 15,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 14:58PM Oct 15,2019 India

உள்ளாடை பற்றி நிலவி வரும் தவறான புரிதலுக்கு பெண்ணிய ஆர்வலர் திலகவதி சில விளக்கங்களை பகிர்ந்துள்ளார். உள்ளாடை பற்றி அதிலும் பெண்களின் உள்ளாடைகள் பற்றி பேசவே கூடாது. பேச்சுமட்டுமல்ல. அதை ஆண்களின் கண்களில் படுமளவிற்கு காய வைக்கவோ, வீட்டில் கண்ட இடங்களிலோ போடக் கூடாது. அது அத்தனை அசிங்கமானது.வெட்கம் நிறைந்த ஒன்று. இப்படி தான் பெண்களின் உள்ளாடை குறித்து சமூகம் வைத்துள்ள கருத்து உள்ளது.

அதே சமயம் இந்த கட்டுப்பாடு ஆண்களுக்கு கிடையாது. அவர்களின் ஜாக்கி ஜெட்டிகள் வெளியே தெரியலாம். அதை பார்க்கும் போது நாம் வெகு சாதாரணமாக கடந்து விட வேண்டும். பிரா எனப்படும் உள்ளாடை முக்கியமாக 2 காரணங்களுக்காக அணியப்படுகின்றது. ஒன்று மார்பகம் ஆபாசமாக தெரியக் கூடாது என்பதற்காக. பிரா அணியா மார்பகம் என்பது ஆபாசமானதாக சித்தரிக்கப்படுகின்றது. மார்பகத்தின் அளவும் வடிவமும் இங்கே நிர்ணயிக்கப்படுவதால் அந்த வடிவிற்கு கொண்டுவர கவர்ச்சிக்காக அணியபடுகின்றது. இதை தவிர வெகு சிலரே அசௌகரியமாய் உணரும்போது பிரா அணிகிறார்கள்.

பெண்கள் 8 முதல் 10 மணிநேரம் தொடர்ச்சியாக பிரா அணிந்து வெளியே சென்று வீட்டிற்கு திரும்பி பிராவை கழற்றினால், முதுகு தோள்பட்டை மார்பகத்தின் கீழே என அங்கங்கே சிவந்திருக்கும். குத்தும், வலிக்கும். யாரோ ஒருவரின் கண்ணிற்கு நாம் ஆபாசமாக தெரியக்கூடாது என்பதற்கும், கவர்ச்சியாகத் தெரியவேண்டும் என்பதற்கும் உடல் சிவக்கும் வலியோடு எரிச்சலோடு அணிய வேண்டும் என்பது எவ்வளவு வேதனை.

பல பெண்கள் இப்போது தங்கள் வசதிக்கு ஏற்ப பிரா அணிந்து கொள்கின்றனர். அத்தகைய பெண்களை பார்க்கும் போது பெண்களே அவர்களை உற்று நோக்காமல் கேலி பேசாமல் அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.சில பெண்கள் வீட்டில் இருந்தாலும் தூங்கும் போது 24 மணி நேரமும் பிரா அணிகிறார்கள் அது உடலுக்கும் நல்லதல்ல. | underarms: பெண்கள் அக்குளில் இருக்கும் முடியை ஷேவிங் செய்வது நடைமுறையில் சாத்தியமா? என்ன சொல்லி வச்சிருக்காங்க பாருங்க!

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top