#face acne: பெண்களே அந்த இடத்திலும் ஜாக்கிரதை - முகத்தில் மட்டும் தான் பருக்கள் வருமா..? முழுசா தெரிஞ்சுகோங்க.!
  • 14:00PM Jun 18,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 14:00PM Jun 18,2019 India

சில பேருக்கு முகம் பளபளப்பாக இருக்கும், ஆனால் முகத்தை தாண்டி உடலில் சில இடங்களில் தேமலும், பருக்களும் நிறைந்து இருக்கும். ஒரு பரு முகத்தில் வந்தாலே, மஞ்சள் அரைச்சு பூசுறது. கடலைமாவு பூசறதுன்னு பண்ணி முகத்த ஒரு வழி ஆக்கிருவாங்க. என்ன தான் முகத்த தங்கம், தங்கமா பாத்துக்கிட்டாலும், பரு முகத்தில மட்டுமே வரக்கூடியது இல்ல. பெண்களுக்கு பரு மார்புலையும் வரும். முகத்தில இருக்க பரு உடஞ்சா கூட, முகம் கழுவி உடனே சுத்த படுத்த முடியும். ஆனா மார்புல வர பரு உடஞ்சா குளிக்கும் போது மட்டும் தான் சரியா சுத்தப்படுத்த முடியும். அதுவரைக்கும் பருக்கள் நீர் பட்டு தொற்று உருவாக வாய்ப்பு இருக்கு. சரி இந்த பரு எதனால எல்லாம் வருதுன்னு தெரிஞ்சா முடிஞ்ச அளவுக்கு, அத சரியா கவனிச்சு கட்டுப்படுத்த முடியும். அது எப்படின்னு அடுத்து பாக்கலாம்.

#1. மார்புப் பகுதியில் அதிகமான எண்ணெய் வடியிறது, மூடிய சருமத்துக்குள்ள அழுக்கு சேரது, சருமத் துளைகள் மூடிக்கொள்ளுதல் இந்த மாதிரி காரணத்தால தான் பரு வருது.

#2. முடிந்த வரைக்கும் வியர்வை துணியை உடனே மாற்றினால், அரிப்பு, எரிச்சல் உண்டாவத தவிர்க்கலாம்.

#3. பாடி ஸ்கர்ப் பயன்படுத்தி முகத்தைப்போல் மார்பும் பகுதியிலும் மசாஜ் செய்து துடைக்கலாம். இதனால இறந்த செல்கள் எல்லாம் நீக்கப்படும்.

#4. மணமா இருக்குன்னு கண்ட கெமிக்கல் இருக்க பாடி வாஸ் வாங்காம பென்சோயில் பெராக்சைடு கலந்து இருக்க பாடி வாஸ் வாங்கலாம்.

#5. அப்படியும் பரு குறையாம இருந்தா துணி துவைக்க பயன்படுத்தும் டிடர்ஜண்டை கவனிக்கவும்.

#6. உணவு கட்டுப்பாடும் முக்கியம். புரோட்டின் அளவா சாப்பிட்டு, விட்டமின்-இ இருக்க உணவு எடுத்துகிட்டா சரும பிரச்சனை குறையும்.

#face acne: இந்த மாதிரி சில விஷயங்கள் உண்ணிப்பா பார்த்தாவே, தினமும் பப்ளிக்ல அனுபவிக்கிற உடல் சார்ந்த பிரச்சனை பாதி குறைஞ்ச மாதிரி தான்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top