#bafcsm19 கண் இமைப்பதற்குள் உடையாக மாறிய பலூன்! ஆச்சர்யத்தில் ஃபேஷன் உலகம்!
  • 16:57PM Jun 06,2019 Central Saint Martins
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 16:57PM Jun 06,2019 Central Saint Martins

ஒவ்வொரு நாளும் ஃபேஷன் உலகில் ஏகப்பட்ட கலைஞர்களால் எக்கச்சக்கமான ஆடை வடிவமைப்புகள் அறிமுகசெய்யப்படும். வியக்கத்தக்க வகையில் வித்யாசமான ஸ்டைலில் வினோத ஆடைகளை வடிவமைக்கும் கலைஞர்கள் தங்களது திறனை முக்கிய ஃபேஷன் ஷோக்களில் வெளிப்படுத்தி அசத்துவார்கள். அப்படி ஒரு அசத்தலான ஆடையை Fredrik Tjaerandsen என்பவர் Central Saint Martins-ல் நடந்த BA Fashion Show-ல் அறிமுகப்படுத்தியுள்ளார். பப்ளி கலெக்‌ஷன்ஸ் என்று அழைக்கப்படும் இந்த ஆடைகள் முழுவதும் ரப்பரால் ஆனது. இந்தப் பிஏ பேஷன் ஷோ நடந்துகொண்டிருந்த போது திடீரென மிகப்பெரிய பலூன் பந்துகளுக்குள் மாடல்கள் ஒவ்வொருவராக அணிவகுத்து வந்தனர். இதனைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுயென்ன ஆடை, இந்த உடையை எப்படி உடுத்துவது என்று கூடியிருந்த அனைவரும் முணுமுணுக்கத் தொடங்கினர். இவர்கள் அனைவரும் கண்ணிமைக்கும் நொடியில் பலூன் பந்துகள் அனைத்தும் அழகான ரப்பர் உடையாக மாறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. இப்படி ஒரு வியப்பு மிக ஆடையை வடிவமைத்ததற்காக Fredrik Tjaerandsen-ஐ அனைவரும் பாராட்டி வருகின்றனர். தற்போது இந்த வினோத பலூன் ஆடைகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது!

Balloon catwalk

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by BA FASHION CSM (@bafcsm) on

Fashionate Balloons

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by THEATRE OF ARTISTS (@theatreofartists) on

Balloon Preparations

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by N.A.C.O Magazine (@nacomagazine) on

 

Top