Highrise

மீண்டும் வந்துவிட்டது உங்கள் நோக்கியா போன்! பட்ஜெட் விலையில் பக்காவான தீபாவளி பரிசு! ஜியோ வாடிக்கையாளருக்கு சிறப்பு தள்ளுபடி வேற கொடுக்குறாங்களாம்!

Oct 22 2021 05:36:00 PM

ஸ்மார்ட்போன்கள் வருவதற்கு முன்பு வரை நம் நாட்டையே ஆட்டிப்படைத்தவை நோக்கியாவின் பட்டன் போன்கள் தான். பிறகு ஸ்மார்ட்போன் சந்தைகளின் வளர்ச்சி நோக்கியாவின் ஆதிக்கத்தை சற்றே பதம் பார்த்தது. இருப்பினும் காலமாற்றத்திற்கு ஏற்ப நோக்கியாவும் 4G ஸ்மார்ட்போன்களை வடிவமைத்து சந்தைக்குள் மீண்டும் களமிறங்கியது. இப்போது நோக்கியாவின் புது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை மீண்டும் ஈர்த்து வருகிறது.

nokia-c-30 budjet-smartphone

ஜூலையில் உலக அளவில் வெளியிடப்பட்ட நோக்கியா சி 30 ஸ்மார்போன் தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6000 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டுள்ள இந்த போனில் 13 மெகாபிக்சல் கேமரா உட்பட ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது. போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. நீங்கள் ஜியோ வாடிக்கையாளராக இருந்தால் உங்களுக்கு இந்த போனில் விலையில் இருந்து பத்து சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

nokia-c-30 budjet-smartphone

அதிகபட்சமாக 1000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிகிறது. நோக்கியா சி 30 போனின் 3 GB RAM மற்றும் 32 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ள மாடலின் விலை 10,999 ரூபாயாக இருக்கிறது. அதுவே 4 GB RAM மற்றும் 64 GB ஸ்டோரேஜ் மாடல் 11,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதிநவீன ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கு கண்டிப்பாக பட்ஜெட் விலையில் தீபாவளியை கொண்டாட ஏற்றதாக இருக்கும்.

nokia-c-30 budjet-smartphone

பண்டிகை கால சலுகையாக குறைந்த விலையில் நோக்கியா தன்னுடைய சி 30 போனை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. ஓப்போ, விவோ, சாம்சங் என்று எத்தனை வந்தாலும் எங்களுக்கு எப்பவும் நோக்கியா தான் கெத்து என்று மார்தட்டிக்கொள்ளும் நபராக நீங்கள் இருப்பின் உங்களுக்கான சரியான தீபாவளி பரிசு நிச்சயம் நோக்கியா சி 30 தான் நண்பர்களே. புதிய மொபைல் வாங்க வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருக்கும் நடுத்தர மக்களுக்கு ஏற்றது இது தாங்க. நோக்கியாவின் தீபாவளி பட்ஜெட் ஸ்மார்ட்போனான சி 30 குறித்த உங்கள் கருத்துக்களை எங்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்க.

nokia-c-30 budjet-smartphone