பப்பி லவ்!!!
  • 13:18PM Nov 22,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 13:18PM Nov 22,2017 Chennai, Tamil Nadu 600003, India

கேட்கவே செமையா இருக்குல்ல… பழைய ஆளுங்களுக்கு இது என்னன்னு கூடத் தெரியாது.  பட், இப்போ இருக்கிற ஜெனரேஷனுக்கு நல்லாவே தெரியும். தெரியாதவங்களுக்கும் தெரியற மாதிரி சொல்றேன்.  உங்க வாழ்க்கையிலேயே மறக்கவே முடியாத காதல் எதுன்னு கேட்டா, ஒட்டு மொத்தமா எல்லாரும் சொல்ற பதில் இந்த பப்பி லவ்னு சொல்லப்படுற முதல் காதல்தான்.  அதென்ன பேரு அது பப்பி லவ்னு கேட்டா, காரணம் இல்லாம இல்லை.  ஒரு நாய்க்குட்டியோட செய்கைளை கவனிச்சீங்கன்னா புரியும்.  தனக்கு என்னன்னு தெரியாத பொருளை மோந்து பார்க்கிறதுல ஆரம்பிச்சு, கடிச்சு ருசி பார்க்கிற வரைக்கும் எல்லாமே பண்ணும்.  காரணம், ஆர்வக் கோளாறு.  அதே மாதிரித்தான் இந்த பப்பி லவ்வும். நம்மள யாரோ பார்க்கிறாங்கங்கிறதுல ஆரம்பிக்கிற குறுகுறுப்பு, அவங்களை இம்ப்ரஸ் பண்ண எடுத்துக்கிற முயற்சின்னு நிறையவே சுவாரஸ்யம் இருக்கிறது இந்தக் காதல்லதான்.

என்னைக் கேட்டா கிட்டத்தட்ட சூப்பர் ஹீரோ மோட்தான்.  முகத்தையே அழகாக்குற வெட்கத்துல இருந்து, அசால்ட்டா பஸ்சை ஓட விட்டு விரட்டி ஒரு கையில பேலன்ஸ் பண்ணி ஏறச் சொல்ற மாதிரி விபரீதமான எல்லாத்தையும் செய்ய வைக்கும்.  பாய்ஸ் படத்துல அம்மணமா ஓடக் கூடத் தயங்காத மாதிரி ஹீரோ கேரக்டரைக் காட்டியிருப்பாங்க… அந்தளவுக்கு கிரேஸியான லவ் இது.  நானும் கூட நீச்சலே தெரியாத சமயத்துல 40 அடி ஆழமிருக்கிற கிணத்துல குதிச்சிருக்கேன், பப்பி லவ் எஃபெக்டல. இன்னைக்கு நினைச்சுப் பார்த்தா எவ்வளவு லூசுத்தனமான வேலையெல்லாம் பண்ணிருக்கேன்னு விழுந்து விழுந்து சிரிக்கிறதும் உண்டு.  முதல் பார்வைப் பரிமாற்றம், முதல் கவன ஈர்ப்புன்னு எல்லாமே பர்ஸ்ட் டைம்ங்கிறதால உள்ளுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கிறதே ஒரு சுகம்தான்.

இருந்தாலும், பெரும்பாலான பப்பி லவ் ஒரு இனக்கவர்ச்சிதான்.  முதல் முதல்ல நமக்குப் பிடிச்ச ஹீரோ, ஹீரோயின் தாண்டி லவ்னு ஒரு சக மனுஷனையோ, மனுஷியையோ நேசிக்கிற ஸ்டேஜ்ங்கிறதால, வயசு வித்தியாசம், கேரக்டர், படிப்பு இதுல எதையும் பார்க்காம வரும்.  பெரும்பாலும் பப்பி லவ் பெயிலியர் ஆகக் காரணம் சரியாகப் புரிந்து கொள்ளாமல் போவது.  சினிமாவில காட்டுறதெல்லாம் நிஜம்னு நம்பிகிட்டு அந்த மாதிரி நாமளும் காதலிக்கனும்னு நினைக்கிற குழந்தைத்தனம் அவ்வளவுதான்.  பொஸஸிவ்நெஸ்சை எப்படி பேலன்ஸ் பண்ணனும்னு தெரியாது, சந்தேகம், சுலபமா நம்பறது, மெச்சூரிட்டி இல்லாம இருக்கிறது - இப்படி நிறையக் காரணங்களால சீக்கிரமே பிரிஞ்சிடும் இந்தப் பப்பி லவ். ஆனாலும், அடுத்தக் கட்டமான கொஞ்சம் மெச்சூர்டான காதலுக்கு நம்மைத் தயார் படுத்தறதும் இதுதான்.

 

என்னதான் இதைப் பத்தி சொன்னாலும் வாழ்க்கைல இது வராத மனுஷங்கன்னு இருக்கவே முடியாது.  எல்லாருக்கும் எதாவது ஒரு பேரைக் கேட்டா உள்ளுக்குள்ள மணியடிக்கும்.  அதான் இந்தப் பப்பி லவ்.  எனக்குத் தெரிஞ்சு நிறைய பேமிலில குழந்தைங்க பேரா, பாஸ்வோர்டா இருக்கிறது இந்தப் பப்பி லவ்தான்.  வெளியில காமிச்சுக்காம உள்ளுக்குள்ளயே வச்சு சந்தோஷப்படுற அளவுக்கு நிறைய சுவாரஸ்யம் இருக்கிற இந்த பப்பி லவ்தான் உண்மையிலேயே என்னைக்கும் பெஸ்ட்.  ஏன்னா இன்னைக்கு நீங்க ஒரு நல்ல கணவரா இல்லை மனைவியா இருக்கீங்கன்னா அது இந்தப் பப்பி லவ் கொடுத்த பாடத்தோட விளைவாகத்தான் கண்டிப்பா இருக்கும்.  அந்த வயதோட உன்னதமான விஷயம் இது.  என்ஜாய்…        

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top