#kailash country: இன்னர் இன்ஜினியரிங்கா.? ராஜசேகரன் என்கிற நித்தியானந்தா - உள்ளே பொதிந்து கிடைக்கும் கார்பரேட் இரகசியம்!
  • 17:05PM Jan 22,2020 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 17:05PM Jan 22,2020 India

இன்றைய நவீன குருக்கள் ஒரு கார்ப்பரேட் அமைப்பு போன்ற ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறார்கள், அதில் அவர்கள் யோகா மற்றும் தியான முறைகளைத் தங்கள் பாணிக்கு ஏற்ப நடத்துகிறார்கள். பிக்ரம் யோகா, சுதர்ஷன் க்ரியா, inner engineering என்று நவீனமாகப் பெயர் வைத்துக்கொண்டு, உயர்ந்த கட்டணத்திற்கு வகுப்புகள் நடத்துகிறார்கள். மக்கள் இதில் கலந்துகொண்டு பயனும் பெறுகிறார்கள், அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான இரண்டு விஷயங்கள் உண்டு.

your image

ஒன்று இவர்கள் கற்றுக்கொடுக்கும் யோகா மற்றும் தியான முறைகள் நம் சாஸ்திரங்களில் உள்ளவை தான். அவர்களே இதை உருவாக்கியது போல சில குருக்கள் சொந்தம் கொண்டாடுவார்கள். இந்த வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றினால் நிச்சயம் நம் உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் முன்னேற்றம் அடையும்.

இரண்டு இதை அனுபவிக்கும் மக்கள் தவறுதலாக இந்த நல்ல மாற்றங்களின் காரணம் அந்த குருவின் மீது செலுத்துவார்கள். உண்மையில் அவர்கள் அடையும் பயன்களுக்கு அவர்களே தான் காரணம். குருவின் பங்கு சிறிது தான். இதை ‘false attribution’ என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். குரு என்பவர் மீது மரியாதை இருக்கலாம், அன்பும் இருக்கலாம், ஆனால் குரு தான் எல்லாம் என்று கண்மூடித்தனமாகத் தலையில் வைத்துக்கொண்டாடினால், ஆபத்து நமக்குத் தான். 

உங்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றால், நீங்களே உங்கள் கைப்பட ஏழை மக்களுக்கு உதவி செய்யுங்கள். எந்த ஒரு நவீன குரு அமைப்பிற்கும் நன்கொடை வழங்க வேண்டாம். உண்மையில் விளம்பரம் செய்யாமல் நல்லது செய்யும் பல அமைப்புகள் உண்டு. நிறையக் காலம் நன்கு தெரிந்த அமைப்பிற்கு வேண்டுமானால் நீங்கள் உதவலாம், அதில் கலந்துகொள்ளவும் செய்யலாம். தயவுசெய்து நவீன குருக்களின் அமைப்புகளிலிருந்து தள்ளியிருங்கள். ஒரேயடியாக புரக்கணிக்கவும் வேண்டாம், அதில் முழு மூச்சாக இறங்கவும் வேண்டாம் என்று கூறியுள்ளார் பிரியா. | Nithiyanantha: என்னாச்சு தலைவனுக்கு? இந்த காலகட்டத்தில் இதெல்லாம் ஜுஜுபி மேட்டர் - நித்தியிடம் பயங்கர சக்தி!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top