#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி!!! XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO!!!
  • 15:30PM Jul 16,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 15:30PM Jul 16,2019 Chennai

NISHABDHA SEVA TRUST என்ற NGO தற்போது அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும், ஒரு புது விதமான யோசனையைத் தற்போது செயல்படுத்தி வருகிறது. இவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், கடந்த 15 வருடங்களாகச் சென்னையைச் சுற்றுவட்டாரத்தில், LEPROSY என்ற தொழுநோய் ஒழிப்பைப் பிரதானமாகச் செயல்படுத்தி தற்போது, தொழுநோய் உள்ள பிச்சைக்காரர்களைப் பார்க்கவே முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியவர்கள். இவர்களின் பாடம் 2 படம் பற்றி ஒரு சிறிய அறிமுகம்.

#1. ஆரம்பக்கட்டமாக இவர்கள் XI வகுப்பிற்கான அரசு மற்றும் COROPORATION SCHOOL-களின் பாடத்திட்டத்தை படமாக மாற்றியுள்ளார்கள்.

#2. இதற்குக் கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து இவர்கள் இந்த SYLLABUS-ஐ அப்படியே படமாக மாற்றியுள்ளார்கள்.

#3. பாடத்தைப் படிப்பதை விடவும் பார்த்துப் புரிந்து கொள்வது சுலபமாக இருப்பதாக மாணவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.

#4. இந்தப் பயிற்சியை தற்போது இவர்கள் அரசு மற்றும் CORPORATION பள்ளிகளில் கிட்டத்தட்ட இலவசமாகவே வழங்கி வருகிறார்கள்.

#5. அரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தைத் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்த வேண்டும் என்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு உழைத்து வருகிறார்கள்.

#6. இதற்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் இவர்கள் நன்கொடையாகப் பெற்று, அதை வைத்துத்தான் பள்ளிகளில் கொஞ்சம் கொஞ்சமாக தங்களால் முடிந்த அளவு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

#7. மற்ற வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தையும் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றனவாம்.

#8. இந்தப் பயிற்சி வகுப்பு வேண்டும் என்று விரும்பும் பள்ளிகள் இவர்களைத் தொடர்பு கொண்டால் போதும், ஒரு DEMO பயிற்சி வகுப்பை நடத்திச் சோதித்துக் கொள்ளலாம்.

#9. வேறு சில பயனுள்ள இணைப்புகள்:  |  Teachers Eligibility Test  |  Noble World Record  |  Back Track Record  |  Kids Fitness  |  Ahmed Ali Auto Rickshaw  |

#PAADAM2PADAM என்பது இனிவரும் காலங்களில் கல்விமுறையாகவே மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கான முன்னெடுப்பை இவர்கள் இப்போதிருந்தே முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தத் திட்டத்தைப் பற்றி மேலும் விபரங்கள் தேவைப்படுமானால் தொடர்பு கொள்ள : விஸ்வநாதன் A : 97907 24069-ல் தொடர்பு கொள்ளுங்கள்!!!   

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top