அன்றாடம் குளிப்பது உடலுக்கும் மனதுக்கும் ஏகப்பட்ட நன்மைகள் தரும். ஒரு சில சோம்பேறிகள் வாரக்கணக்கில் கூட குளிக்காமல் இருப்பார்கள். அது மிகவும் ஆபத்தானதாகும், தினமும் இரண்டு முறை குளிப்பதால் உடலை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும். பெரும்பாலும் அனைவரும் காலை நேரத்தில் குளித்து முடித்து சாப்பிட்டு அலுவலகங்களுக்கு செல்வது வழக்கம். ஆனால் இரவு படுக்கும் நேரத்தில் குளித்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா ?
இரவு நேரத்தில் குளிப்பதால் எண்ணிலடங்கா நன்மைகள் நமக்கு கிடைக்கும். இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பாக ஜின்க் சோப்பினால் குளிப்பது முகத்தில் பருக்கள் வராமல் பாதுகாக்கும். இரவு நேரத்தில் தலைக்கு குளித்துவிட்டு படுத்தால் நன்றாக தூக்கம் வரும். முடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும். காலை எழுந்தவுடன் முடி வறண்டு போகாமல் மிருதுவாக இருக்கும்.
நம்முடைய தலையில் உள்ள அழுக்கு காரணமாக தலையணையில் பாக்டீரியா கிருமிகள் உருவாக வாய்ப்பிருக்கிறது. இதை ஒழித்துக்கட்ட தலையை சுத்தம் செய்து குளித்துவிட்டு படுப்பது சிறந்த வழியாகும். இரவு நேரத்தில் குளிப்பது உங்களுக்கு மன அமைதியை தந்து உங்களை நிம்மதியாக உறங்க வைக்கும்.