சாதியை ஒழிக்க, காதலை கையில் எடுத்த சமூகச் சிந்தனையாளர்கள்!
  • 18:01PM Feb 19,2019 Tiruchirappalli
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 18:01PM Feb 19,2019 Tiruchirappalli

தமிழகத்தைச் சேர்ந்த ஆதலினால் காதல் செய்வீர் அறக்கட்டளையினர் சாதியை ஒழிக்கப் புது முயற்சியாகத் திருச்சி மாவட்டத்தில் குடும்பத்தை எதிர்த்துக் கலப்புத் திருமணம் செய்பவர்களுக்காகப் பாதுகாப்பு நிறைந்த வீடு ஒன்றை கட்டியுள்ளனர். மறைந்த அறிஞர் அண்ணா முதல் பல தலைவர்கள் கலப்புத் திருமணத்தை ஊக்குவித்தலும், நமது தமிழகத்தில் இதுவரை கலப்புத் திருமணங்கள் அங்கீகரிக்கப்படாத ஒன்றாகதான் உள்ளது. அதிலும் காதலித்துக் கலப்புத் திருமணம் செய்பவர்களைப் பெற்றோரே ஆள் வைத்து கொல்லும் சம்பவங்கள் இன்றும் நடந்து கொன்டுதான் உள்ளது. இப்படிக் காதலித்துக் கலப்புத் திருமணம் செய்பவர்களைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியாகத் தமிழகத்தைச் சேர்ந்த உயர் நீதி மன்ற வக்கீல்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறையினர் ஒன்றிணைந்து திருச்சி மாவட்டம் நாவல்பட்டு காவலர் குடியிருப்பில் கலப்புத் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடிக்குப் பாதுகாப்பு வழங்கும் விதத்தில் சிறிய வீடு ஒன்றை கட்டியுள்ளனர். ஆதலினால் காதல் செய்வீர் என்ற அறக்கட்டளை சார்பாகக் கட்டப்பட்டிருக்கும் இந்த வீட்டில் வசதிகள் குறைவாக இருந்தாலும் பாதுகாப்பானது.

கலப்புத் திருமணம் செய்தவர்கள், கலப்புத் திருமணம் செய்யவுள்ளவர்கள் ஆகியோரின் குடும்பங்கள் அவர்களது விருப்பத்திற்கு எதிராகச் செயல்பட்டால், இந்த வீட்டில் பாதுகாப்புடன் தங்கவைக்கப்படுவார்கள். இந்த வீட்டின் முகப்பில், "சாதி மதம் ஒழிய கலப்பு மணமே தீர்வு" என்று எழுதப்பட்டிருக்க இதைப் பற்றி அந்த அறக்கட்டளையின் உறுப்பினர் குணசேகரனிடம் கேட்டபோது, கலப்புத் திருமணங்கள் மட்டுமே சாதியை ஒழிக்கச் சிறந்த வழியாகும். கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கவும், கலப்புத் திருமணம் செய்பவர்களை இந்தச் சமூகத்தில் இருந்து பாதுகாக்கவும் அறக்கட்டளையினர் செயல்பட்டு வருகிறோம், அதில் ஒரு முயற்சியாக இந்த வீட்டை கட்டியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இதுவரை திருப்பூரை சேர்ந்த வக்கீல் குணசேகரன் மட்டும் இதுவரை 150 கலப்புத் திருமணங்கள் செய்துவைத்துள்ளார். அந்தக் கலப்புத் திருமணம் செய்த ஜோடிகளுக்கு இவரது வீட்டிலேயே பாதுகாப்பு அளித்துள்ளார். இவரைப் போலவே இந்த ஆதலினால் காதல் செய்வீர் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள், பல காதல் ஜோடிகளுக்குக் கலப்புத் திருமணம் செய்துவைத்து உதவிகரமாக இருந்துள்ளனர்.

Top