ஆன்லைன் விளையாட்டுக்களின் அடுத்த கட்டம்!!!
  • 12:03PM Nov 15,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 12:03PM Nov 15,2017 Chennai, Tamil Nadu 600003, India

விளையாட்டுகளின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக விரைவில் வெளிவர உள்ளது, உங்கள் முகபாவங்களை உள்ளீடாகப் பெற்று நீங்கள் பேசுவது முதற்கொண்டு விளையாட்டில் இருக்கும் நபர்களைப் பேச வைப்பதுதான் அது.  விர்ட்சுவல் கேமிங் என்பது நீங்கள் இணைய வெளியில் வாழும் வாழ்க்கை போன்ற விளையாட்டு. அதில் நீங்கள் உங்களின் கனவுகளுக்கேற்ப ஒரு இரண்டாம் வாழ்க்கையை வாழ முடியும். இந்த மாதிரி விளையாட்டுகள் முழுக்க முழுக்க ஆன்லைனிலேயே விளையாட வேண்டியிருக்கும்.

இந்த விளையாட்டுக்களின் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக இம்பீரியல் கேமின் ஸ்டார் சிட்டிசன் விளையாட்டில் விளையாடும் இரு நபர்கள் தொடர்பு கொள்ளும் போது இயற்கையாகத் தெரிய வேண்டுமென உங்கள் முகத்தின் பாவங்களை படித்து, அதை அப்படியே திரையில் வெளிப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  க்ராண்ட் தெப்ட் ஆட்டோ 5ம் பாகம் மற்றும் டெஸ்டினி விளையாட்டுக்களில் முகபாவங்களைப் புகுத்திய பேஸ்வேர் டெக்னாலஜீஸ் நிறுவனம் இந்தப் பணிகளை மேற்கொள்கிறது.

தற்போது கிடைக்கும் வெப் கேமரா மூலமாகவே இதை அனுபவிக்க முடியுமென்றாலும் பேஸ்வேர் டெக்னாலஜீஸ் இதற்காக முகபாவங்களைப் படிக்கும் சென்சார் ஒன்றையும் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.  காரணம் என்னவென்றால், கேமிராக்களின் செயல்பாடு 30 fps இதற்குத் தேவைப்படும் பதிவோ 65-70 fps (Frames per Second – ஒரு நொடியில் காட்டப்படும் ப்ரேம்களின் எண்ணிக்கை) அது மட்டுமல்லாமல் கேமிரா பெரிய பின்னூட்டத்தை படம் பிடிக்கும்.  முன்னால் இருக்கும் முகம் தெளிவாகப் பதிவிட முடியாது என்பதே.  இதே சென்சார் என்றால் முகத்தை மட்டுமே குறி வைத்து அந்த அசைவுகளை மட்டுமே வைத்துச் செய்வதால் அதிகபட்ச துல்லியத்தினை தர முடியும் என்கிறார்கள்.

எது எப்படியோ, விரைவில் நாமே இதன் மூலம் ஒரு விர்ச்சுவல் கேமை சீக்கிரமே எதிர்பார்க்கலாம்… (நன்றி : mashable.com)

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top