#NirmalaSitharaman பைனான்ஸ் மினிஸ்டரை மகாலக்ஷ்மியாகச் சித்தரித்த நியூஸ் சேனல்! இது என்னடா மகாலட்சுமிக்கு வந்த சோதனை!
  • 13:38PM Jul 04,2019 Mumbai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 13:38PM Jul 04,2019 Mumbai

கிரீடிவிட்டி என்ற பெயரில் வடநாட்டு ஊடகங்களின் அட்டுழியங்கள் கொஞ்சம்நஞ்சம் அல்ல! மக்களவை தேர்தலின் போது இந்தியன் டிவி தொகுப்பாளர் இந்தியா முழுக்கப் பிளைட்டில் பறப்பது ஒட்டு எண்ணிக்கை பற்றி விவரமாகக் கூறுவது போல ஒளிபரப்பு செய்தனர். அதேபோல ஸ்ரீதேவி மரணத்தின் போது ABP டிவியில் தொகுப்பாளினி ஸ்ரீதேவியின் குளியலறையில் நின்று செய்தி வசிப்பது போல ஒளிபரப்பு செய்தனர். பார்வையாளர்களை ஈர்ப்பதற்காகக் கிரீடிவிட்டி என்ற பெயரில் இந்தச் செய்தி நிறுவனங்கள் முயற்சிக்கும் அனைத்தும் பார்வையாளர்களைக் கவருவதை விட விமர்சனங்களையே உருவாக்குகின்றது. இந்நிலையில் இந்தியாவின் முக்கியச் செய்தி நிறுவனமான ஜீ நியூஸ், வெளியாகவுள்ள யூனியன் பட்ஜெட் குறித்து ஒரு டீசர் வெளியிட்டுள்ளனர்.

இந்த டீசரை பார்த்த அனைவரும் எப்படி மனசாட்சியே இல்லாமல் செய்தி நிறுவனங்கள் இப்படியெல்லாம் விளம்பரம் வெளியிடுகின்றனர் என்று தெரிவித்து வருகின்றனர். என்னதான் கிரீடிவிட்டியாக இருந்தாலும் மதத்தையும், அரசியலையும் கலந்து இப்படியா விளம்பரம் வெளியிடுவது என்று யோசிக்கவைத்துவிட்டனர். இவர்கள் வெளியிட்டுள்ள டீசரில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சித்தராமனை மகாலக்ஷ்மி போலச் சி.ஜி செய்து வெளியிட்டுள்ளனர். மகாலட்சுமிக்கு கூட 4 கைகள் தான், ஆனால் பாதுகாப்பு, கல்வி, விவசாயம், மாநில கட்டமைப்பு, ரயில்வே என அனைத்து துறைகளையும் 8 கைகளால் தாங்கி நிற்பது போல வடிவமைத்துள்ளனர். இந்த டீசர் தற்போது இந்தியா முழுக்க வைரலாகி வருகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top