#Bike : புதிய சுசூகி ஜிக்ஸெர் 250 SF
  • 12:39PM May 25,2019 Chennai
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 12:39PM May 25,2019 Chennai

இந்தியாவில் உள்ள 250சிசி செக்மென்ட்டில் குறைவான பைக்குகளே உள்ளன  . 250 சிசி செக்மென்ட் பைக்கின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக, சுஸூகி புதிய ஜிக்ஸர் 250 SF எனும் பைக்கை அறிமுகம் செய்துள்ளது.  இந்த ஃபுல் ஃபேரிங் ஸ்போர்ட்ஸ் பைக்குடன், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஜிக்ஸர் 155 SF பைக்கும் (சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை: 1.10 லட்சம்) அறிமுகமாகியுள்ளது. சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையான 1.71 லட்சத்தில் கிடைக்கும் சுஸூகி 250 SF இந்த பைக் பைக் பிரியர்களின்  எதிர்பார்ப்புகளை நிறை வேற்றுமா ?

Suzuki_Gixxer_SF_Series_(1)_19052.jpg

250சிசி பைக்கிற்குத் தேவையான அதிரடியான தோற்றம் இருக்கிறது .கிளிப் ஆன் ஹேண்டில்பார், பைக்கை நெரிசலான சாலைகளிலும் வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ளது 250 சிசி  செக்மென்ட்டில் நுழைந்திருக்கும் ஜிக்ஸர் 250 SF, அதன் டிசைனுக்காகவே அதிகம் போற்றப்படக்கூடிய மாடலாக இருக்கலாம்

Suzuki_Gixxer_SF_Series_(3)_19049.jpg

ஜிக்ஸர் 250 SF பைக்கில் இருக்கும் சிங்கள் சிலிண்டர் 249சிசி இன்ஜின், SOHC - ஆயில் கூல்டு - 4 வால்வ் - ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் அமைப்பைக் கொண்டிருக்கிறது. 26.5bhp@9000rpm பவர் மற்றும் 2.26kgm@7500rpm டார்க்கை வெளிப்படுத்தும் இந்த SOCS ஷார்ட் ஸ்ட்ரோக் இன்ஜின். 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Suzuki_Gixxer_SF_Series_(8)_19085.jpg

ஸ்பிலிட் சீட்கள் மற்றும் மல்டி ஸ்போக் 17 இன்ச் அலாய் வீல்களுடன் பெரியளவிலான ரப்பர்களுடன் கிடைக்கிறது. இதில் உள்ள இன்ஸ்டுரூமென்ட் பேனல் முழு எல்சிடி யூனிட்டாகவும் டூயல் எக்சிஸ்ட் எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டம் கொண்டதாக இருக்கும். சஸ்பென்சனை பொருத்தவரை முன்புறத்தில் டெலிஸ்கோபிக் போர்க்-கள், பின்புறத்தில் மோனோஷாக் பொருத்தப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் கிடைக்கிறது.

 

Share This Story

துரை முருகன்

Top