#Car : இந்தியாவில் அறிமுகமாகும் ஸ்கோடாவின் புதிய அக்டேவியா
  • 12:33PM Jun 05,2019 India
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 12:33PM Jun 05,2019 India

1895ஆண்டு செக் குடியரசில் தொடங்கப்பட்ட ஸ்கோடா நிறுவனம் ஏறத்தாழ 123 வருட பாரம்பரியம் கொண்ட கார் நிறுவனமாகும்,2000 ஆம் ஆண்டு முதல் ஜெர்மனியை சேர்ந்த வோல்க்ஸ் வேகன் நிறுவனத்தின் துணை பிரிவாக செயல் படுகிறது ,புகழ் பெற்ற ஆடி காரும் வோல்க்ஸ் வேகன் நிறுவனத்தை சேர்ந்ததுதான் ஏற்கனவே இந்திய கார் சந்தையில் தனக்கென ஒரு முத்திரை பதித்த ஸ்கோடா நிறுவனத்தின் புதிய தலைமுறை அக்டேவியா கார்கள் கூடிய விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது ,புதிய ஆக்டாவியா காரின் சிறப்பம்சங்களை பற்றி பார்ப்போம்

Skoda 1.jpg

இந்தியாவில் எக்ஸிகியூட்டிவ் செடான் ரக கார் சந்தையில் ஸ்கோடா ஆக்டேவியாவிற்கு என்று  தனி வாடிக்கையாளர்கள்  வட்டம் உள்ளது.2017ம் ஆண்டு ஸ்கோடா ஆக்டேவியா காரின் ஆர்எஸ் என்ற செயல்திறன் மிக்க மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.இந்தநிலையில், கால மாற்றத்திற்கு தக்க அம்சங்களுடன் முற்றிலும் புதிய தலைமுறை ஆக்டேவியா காரை போக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் ஸ்கோடா உருவாக்கி வருகிறது

skoda.jpg

இந்த கார் இந்த ஆண்டு இறுதியில் உலகளாவிய கார் சந்தைக்கு அறிமுகமாகிறது  இது தற்போதைய மாடலைவிட உருவத்தில் சற்று பெரிய மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.ஸ்கோடா கமிக் எஸ்யூவியில் உள்ள டிசைனை  போல  புதிய ஆக்டேவியா காரில் சில டிசைன் அம்சங்களை காண முடிகிறது. இந்த காரில் ஸ்பிளிட் ஹெட்லைட் க்ளஸ்ட்டர் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் டெயில் லைட்டுகள் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

skoda2.jpg

பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வாய்ஸ் கன்ட்ரோல், சாஃப்ட் டச் பேனல்கள் உள்ளிட்ட ஏராளமான பிரிமீயம் அம்சங்கள் புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் கொடுக்கப்பட இருக்கின்றன.புதிய எஞ்சின் தேர்வுகள் பிஎஸ்-6 மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. பெட்ரோல் மாடலில் மைல்டு ஹைப்ரிட் மாடலிலும் வர இருப்பதாக தெரிகிறது.இந்த கார் அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top