Shoreline

நாம் இதுவரை இந்த நிறத்தில் பார்த்ததில்லையே ? இது என்ன புது அதிசயம் எப்படிங்க என்று கேட்டால் எல்லாரும் தலையை பி ச்சிகிட்டு நிக்கறாங்க

Apr 29 2021 05:58:00 PM

தெற்கு பசிபிக் பகுதியில் உள்ள நியூ கலிடோனியா என்ற தீவில் ஒரு அதிசய மரம் இருக்கிறது. மிக அரியவகை மழைக்காடு மரமான இது 20 மீட்டர் உயரம் வரை வளரும். இந்த மரத்தின் பட்டைகளை வெட்டும்போது தான் அந்த அதிசயம் நம் கண்களுக்கு புலப்படுகிறது.

new-kalitonia

பொதுவாக எந்த மரத்தை வெட்டினாலும் அதனுடைய பால் வெள்ளை நிறத்தில் தான் வரும். ஆனால் இந்த மரத்தின் பட்டையை வெட்டும்போது பால் நீல நிறத்தில் வெளி வருகிறது. இந்தப்பாலில் கிட்டத்தட்ட 25 சதவீதம் நிக்கல் இருக்கிறது. பொதுவாக இவ்வளவு நிக்கல் இருந்தால் அது விஷமாக மாறிவிடும். இருப்பினும் இந்த விஷத்தன்மையுடன் எப்படி இந்த மரம் வளர்கிறது என்பது வியப்பாக உள்ளது.

new-kalitonia

இந்தப்பகுதியில் இருக்கும் மண்ணின் கடுமையை சமாளிக்கவும், பூச்சிகள் அண்டாமல் இருப்பதற்காகவும் இந்த நிக்கலை மரங்கள் பயன்படுத்தி கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் நம்பினாலும் இதுகுறித்த உண்மையான தகவல் இன்னும் வெளிப்படவில்லை. லித்தியம் அயன் பேட்டரிகள் மற்றும் எஃகு உற்பத்தியில் இந்தமரம் முக்கியமான பங்கை கொண்டிருப்பதால் உலோகங்களுக்கு மாற்றாக இதை பயன்படுத்த முடியுமா என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.