Highrise

எதிரணியாய் இருந்தாலும் எதிரியாய் இருக்கக் கூடாது..! || Football viral video

Jun 30 2018 07:30:47 AM

your image

 

உலககோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் தொடங்கி நடைபெற்று வருவதால், உலகெங்கிலும் கால்பந்து ஜுரம் தொற்றிக்கொண்டுள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் கிரிக்கெட் தான் மிகப்பெரிய விளையாட்டு என்று நினைத்து கொண்டிருக்கிறோம், அதுவே உலக அளவில் என்று பார்க்கும் பொழுது கிரிக்கெட்டை விட அதிக ரசிகர்கள் கொண்ட விளையாட்டாக கால்பந்து திகழ்கிறது. பழங்காலத்தில் இருந்தே கால்பந்து விளையாட்டு இருந்து வருவதாக கூறப்படுகிறது. அப்போது மனிதனின் மண்டை ஓட்டை வைத்து விளையாண்டதாக கூறுவார்கள். அன்று தொடங்கிய கால்பந்து விளையாட்டு மீதான மோகம் இன்னும் குறையாமல் அப்படியே தொடர்ந்து வருகிறது.

இதற்கென்று பல கோடிகள் sponser வந்து குவிகிறது. கூடவே அனைத்து தரப்பு பன்னாட்டு வணிக நிறுவனங்களின் முத்திரைகளும் மைதானத்தில் இடம்பெற்று விடுகிறது. கிரிக்கெட் விளையாட்டை கூட ஒரு சில நாடுகளே பார்க்கும். கால்பந்தை உலகெங்கிலும் உள்ள மக்கள் பார்ப்பதால் இதன் வணிகம் சற்று அகன்றே காணப்படும். விளையாட்டின் தன்மைக்கு ஏற்ப இதனை காணும் இரசிகர்களும் வெறித்தனமாக, தான் ஆதரிக்கும் அணி மீது பற்று கொண்டிருப்பார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கள் அணி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக இரவில் தூங்கி கொண்டிருந்த மற்றொரு அணி வீரர்களை கூச்சலிட்டு எழுப்பினர் ஈரான் நாட்டு இரசிகர்கள். அந்த அளவிற்கு உணர்ச்சி பூர்வமாக கால்பந்தை ரசிக்கின்றனர்.

களத்திலும் சில நேரங்களில் மோதல் வரும், ரத்த காயங்கள் ஆகும் நிலை கூட வரும். விளையாடும் போது எதிரணியினர் வேண்டுமென்றே தாக்கியதில் ரொனால்டோ கண்களில் இருந்து இரத்தம் வடிந்து வரும் வீடியோ . கடந்த சில வாரங்களாக, பலரிடத்திலும் பரவி உலகெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு அப்படியே எதிர்மறையாக இன்னொரு வீடியோவும் சமீபத்தில் களம் புகுந்துள்ளது. அதில் வீரர் ஒருவர் பந்தை உதைக்க முற்பட்டபொழுது, நிலை தடுமாறி கீழே விழ செல்கிறார். அப்போது எதிரணி வீரர் என்ன செய்கிறார் என்பதே இதில் உள்ள ட்விஸ்ட். எதிரணியாய் இருந்தாலும் எதிரியாய் இருக்கக் கூடாது என்பதே இறுதியில் தெரிய வருகிறது.