நெற்றியில் வைக்கும் பொட்டிற்கும் தாம்பத்தியத்திற்கு உள்ள தொடர்பு
  • 10:44AM Mar 09,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 10:44AM Mar 09,2019 Tamil Nadu

 

நெற்றியில் வைக்கும் பொட்டிற்கும் தாம்பத்தியத்திற்கு உள்ள தொடர்பு

netri.gif

நமது முன்னோர்கள் பல அறிவியல்ரிதியான விஷயங்களை கடவுளின் பெயரை கூறிச்சென்றுள்ளனர் உதாரணமாக மஞ்சள் சிறந்த ஆன்டி பயாடிக் ஆனால் அதை நேரடியாக சொல்லாமல் கடவுளுக்கு தொடர்பு படுத்தியுள்ளனர் இது தெரியாமல் சிலர் பகுத்தறிவு என்ற பெயரில் அதை விமர்சனம் செய்கிறார்கள் உண்மையான பகுத்தறிவு என்றால் கடவுளை மறுப்பது அல்ல ஒரு விஷயத்தை சொன்னால் அந்த விஷயம் உண்மையா எதனால் அந்த விஷயத்தை சொன்னார்கள் என்று ஆராய்வதே,ஆனால் இங்கு சில சுயநல அரசியல் வியாதிகளால் மன்னிக்கவும் அரசியல் வாதிகளால்   பகுத்தறிவு என்றால் கடவுள் மறுப்பு என்று ஆகிவிட்டது,அதே போலத்தான் நெற்றியில் பொட்டு  வைப்பதும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளை பற்றி பார்ப்போம்

netri3.jpg

 

நமது  இரண்டு புருவங்களுக்கு மத்தியில் நம் உயிர் ஓட்டத்தை தூண்டும் ஆக்கினை என்னும் மையம் உள்ளது

அதை தொட்டு தூண்டும் பொருட்டும் அங்கே உருவாகும் வெப்பத்தை கட்டுப்படுத்தும் பொருட்டும் ஆண் பெண் எல்லோரும் பொட்டு வைக்கப்படுகிறது இந்த காரணம் தான் இதில் இருக்கும் அறிவியல் . ஆனால் நாம் எல்லோரும் இதை   கடைபிடிக்கும் சம்பிரதாய முறை என்ற பெயரில் செய்கிறோம்,திருமணமான பெண்கள் திருமணத்திற்கு பிறகு இரண்டாவதாக ஒரு பொட்டு வைப்பார்கள் அதுதான் வகுடு.

netri2.jpg

நெற்றி வகுட்டில் தினமும் பெண்கள் தொட்டு பொட்டு வைப்பதால் அவர்களின் உடலில் சில மாறுதல்கள் ஏற்படுகிறது. சில சுரப்பிகள் தூண்டப்படுகிறது பெண்களுக்கு நெற்றி வகுடில் தினமும் பொட்டு வைப்பதால், அவர்களுக்கு பாலியல் சுரப்பி நன்கு தூண்டப்படுகிறது. அதேபோல் கர்ப்பப்பையும் வலுப்பெறுகிறது. திருமணத்திற்கு பின் பெண்களுக்கு உடலுறவில் நல்ல ஆர்வம் ஏற்படவும்,கருப்பை வலுப்பெற வேண்டும் என்பதற்காகத்தான் நெற்றி வகுட்டில் பொட்டு வைக்கும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். 

netri 1.jpg

மேலும் சீமந்தம் அல்லது வளைகாப்பு செய்யும் போது எல்லோரையும் கூப்பிட்டு நெற்றியில் பொட்டு வைத்து தொட்டு ஆசீர்வாதம் செய்ய சொல்கிறார்கள். இதனால் கர்ப்பப்பை வலுபெறுகிறது. இதனால் சுகப்பிரசவம் ஏற்படும்.. 

.

Tags

Share This Story

துரை முருகன்

Top