இணையத்தைக் கலக்கும் இனையவாசிகள்..
  • 10:51AM Oct 26,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 10:51AM Oct 26,2017 Chennai, Tamil Nadu 600003, India

இன்றைய  நவீன உலகத்தில் பொழுதுபோக்கிற்கென்று பல ஊடகங்கள் வந்துவிட்டது.முந்தைய காலத்தில் நாடகம் மட்டுமே ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருந்தது பின் தொழில்நுட்ப வளர்ச்சியால் சினிமா உருவானது.காலப்போக்கில் தொலைக்காட்சி எனப் பொழுதுபோக்கு துறை பெரிய வளர்ச்சியைக் கண்டது.அனைத்து ஊடகங்களும்  காலப்போக்கில் தனக்கென்று ஒரு கோட்பாடு வரைந்து அதில் பயணித்தது.மக்கள் புதுமையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் சினிமா மற்றும் தொலைக்காட்சி இல்லாது ஒரு புதிய ஊடகம் ஒன்று தோன்றியது.photo.jpg

        youtube வளர்ச்சியால் இன்று பல கலைஞர்கள் தங்களின் திறமையை வெளிக்கொண்டு வந்துள்ளனர். மற்ற ஊடகங்களைப் போல் இதற்கென்று எந்தக் கோட்பாடும் இல்லை என்பதால் கலைஞர்கள் தங்களுடைய கருத்தை சுதந்திரமாகக் கூறமுடியும் என்பதால் பல புதுவிதமான நிகழ்ச்சிகளை உருவாக்கினார்.இந்தப் புதுமை மக்களிடையே ஒரு புரட்சியை ஏற்படுத்தியது இந்தக் கலைஞர்களை ஆதரிக்கத் தொடங்கினர். இந்த வளர்ச்சி மற்ற ஊடகங்களை இவர்கள் பக்கம் திரும்ப வைத்தது.

200-734.jpg

           முன்பு பரவலாக இருந்த பல மரபுகளை இந்தப் புதுமை முற்றிலுமாக மாற்றியது.மக்களின் விருப்பத்திற்கேற்ப பல நிகழ்ச்சிகளை அவர்கள் கொண்டுவருகின்றனர். இன்று இந்தியாவால் பல யூட்டுபர்ஸ் தங்களின் முயற்சியால் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இன்று பலரது கனவு தொழிற்சாலை என்று கருதப்படும் திரைப்படத்தில் தோற்ற பலர் யூட்டுபர்சக வெற்றி பெற்றுள்ளனர்.

photo (1).jpg

       திறமை இருந்தும் நிரூபிக்க இடம் கிடைக்காத பலர் ஏதோ ஒரு மூலையில் துவண்டுகிடக்கின்றனர். அவர்களுள் சிலர் தங்களுக்குப் பிடிக்காத ஏதோ ஒரு இடத்தில் வேலை செய்கின்றனர் அவர்களுக்கெல்லாம் இவர்கள் ஒரு முன்மாதிரியாக விளங்குகின்றனர். தங்களுக்கான பாதை இல்லை என்று தெரிந்தவுடன் தங்களுக்கென்று ஒரு பாதையை அமைத்து அதில் வெற்றி கண்டுள்ளனர். வைப்புக்காகக் காத்திருப்பதைவிட நாமே ஒரு பாதை அமைத்து வெற்றிக்காகப் பயணிப்போம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top