இந்தியாவே வருந்தும் தமிழக விவசாயின் மரணம்..!! ஒரு இனமே அழிவின் விளிம்பில் தத்தளிக்கும் போது தனியாளாக தலைநிமிர செய்த தமிழன்..
  • 12:24PM Dec 06,2018 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 12:24PM Dec 06,2018 Chennai

புற்றுநோய் சிகிச்சை பெற்றுவந்த 'நெல்' ஜெயராமன் அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயராமன் இதுவரை 169 அரியவகை நெல் விதைகளைச் சேகரித்துள்ளார்.நெல் ஜெயராமன் மருத்துவமணையில் இருந்து அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்தே ஸ்டாலின்,சிவகார்த்திகேயன் உட்படப் பலர் லட்சக்கணக்கில் நிதியளித்து உதவி வந்தனர்.தமிழக அரசும் உதவியுள்ளது.

பாரம்பரிய நெல் ரகங்களை இனம் கண்டறிந்து அவற்றை சேகரித்து, அந்த நெல் இனத்தை காப்பாற்ற பாடுபட்டவர் நெல் ஜெயராமன்.இவரது இந்த இழப்பு இந்திய விவசாயிகளுக்கு ஒரு பேரிழப்பாக கருதப்படுகிறது.இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் சீடராக அழைக்கப்படும் நெல் ஜெயராமன், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 1968ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் அன்று பிறந்தார். இளமைக்காலத்திலே விவசாயத்தில் ஆர்வமுள்ள இவர், நமது பாரம்பரிய நெல் விதைகள் அழிந்து வருவதை கவனித்து அவற்றை மீட்டெடுக்க அரும்பாடு பட்டவர்.

கடந்த 22 ஆண்டுகளில் அவர் 174 வகை பாரம்பரிய நெல் இனங்களை மீட்டெடுத்துள்ளார்,அதுமட்டுமின்றி அவற்றை மறு உற்பத்தியும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் விவசாயிகளுக்கு இது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தியுள்ளார்.கிட்டத்தட்ட 37,000 விவசாயிகளை பாரம்பரிய நெல் விவசாயத்திற்கு மாற்றினார்.ஒவ்வொரு ஆண்டும் நெல் திருவிழா என்ற விழா ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் இந்தியாவில் உள்ள முக்கிய விவசாயிகளை கலந்து கொள்ள செய்தார்.இதற்காக பல மாநில, தேசிய விருதுகளை பெற்ற ஜெயராமன்,நலிந்த விவசாயிகளை தேடித்தேடி சேவை செய்தார்.

இந்நிலையில் இவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தகவலையறிந்த சிவகார்த்திகேயன், அவரை சென்னை அப்பல்லோ ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்து அவருக்கான மருத்துவ செலவு முழுவதும் தானே ஏற்றுக்கொண்டார்.இருப்பினும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Top