#mookuthiamman: திடுதிப்பென்று கோவிலுக்கு புறப்பட்ட நயன்-விக்னேஷ்சிவன்!
  • 13:49PM Apr 08,2020 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 13:49PM Apr 08,2020 Chennai

கன்னியாகுமரியிலுள்ள சக்திவாய்ந்த பகவதியம்மன் திருக்கோயிலுக்கு நேற்று நயன்தாரா தரிசனம் செய்ய சென்றதால் அப்பகுதி மக்கள் அவரை பார்க்க கோவிலில் குவிந்தனர். அவரை வரவேற்ற கோயில் நிர்வாகம்,நயனையும் அவரது காதலரான விக்னேஷ் சிவனையும் சுவாமி தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனர். 'மூக்குத்தி அம்மன்' ஷூட்டிங் கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள நிலையில், நயன் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ஆரம்பித்துள்ளன. வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள 'மூக்குத்தி அம்மன்' படத்தில் நயன்தாரா  அம்மனாக நடிக்கவுள்ளதால் படக்குழுவினர் முழுவதும் சைவத்திற்கு மாறியுள்ளதாகவும் நயன் தன்னுடைய விரதத்தை ஆரம்பித்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

bhagavathi amman 

நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் திரைக்கதையில் இந்த படம் உருவாகவுள்ளதால் வழக்கமான அம்மன் படம் போல இல்லாமல் கண்டிப்பாக வித்தியாசமானதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். #nayanthara: நயனுடன் நெருக்கமாக இருக்கும் இந்த பெண் யாரென்றால்..?? போன மாசம் அப்படி சொல்லிட்டு,இந்த மாசம் நைட்பார்டியா?

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top