#harassment: சமூக அக்கறையில் கொதித்தெழும் நயன்? பொண்ணுங்க கிட்ட எப்படி நடந்துக்கணும் என்பதை முதலில் கத்துக்கொடுக்கணும்!
  • 23:32PM Feb 12,2020 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 23:32PM Feb 12,2020 Chennai

ஐதராபாத்தை சேர்ந்த 26 வயதான  கால்நடை மருத்துவர் பிரியங்கா இரவு பணியை முடித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து தனது  வீட்டிற்கு  திரும்பிக் கொண்டிருந்த வேளையில் முஹம்மது பாஸா,  ஜோலு நவீன், சென்னகேசவலு. ஜோலு சிவா ஆகியோரால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலாக, அடுத்த சில நொடிகளில் தமிழகத்தில் ரோஜா எனும் இளம் வயது பெண்ணும் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் மேலும் பீதியை ஏற்படுத்தியது. தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் என்பது உண்மை தான்,அதே போல தாமதமாக கிடைக்கும் நீதியும் ஒரு விதத்தில் மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இதற்கெல்லாம் விதிவிலக்காக மருத்துவர் பிரியங்கா வழக்கில் தொடர்பான நால்வரை போலீசார் என்கவுண்டர் செய்தது மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

nayanthara

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

justice served ⚖

A post shared by nayanthara🔵 (@nayantharaaa) on

நயன்தாரா தனது அறிக்கையில் அடுத்தடுத்து நம் குழந்தைகளுக்கு பெண் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்த்துகிறார். மேலும் தெலுங்கானா போலீசாரை பாராட்டியும் உள்ளார். #rajarani: ஆலியாவிற்கு செம துணிச்சல் தான்! பகிர்ந்து கொண்ட ஒரு புகைப்படத்தால் குவியும் பாராட்டு!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top