#NATURALREMEDY: PRICKLY PEAR என்று செல்லமாக அழைக்கப்படும் சப்பாத்திக் கள்ளியின் மருத்துவ பலன்கள்!!!
  • 16:17PM Sep 21,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 16:17PM Sep 21,2019 Chennai

சப்பாத்தி கள்ளி வறண்ட பிரதேசங்களில் காணப்படும் தாவர வகை. இத்தாவரம் நீர் இல்லா பகுதியிலும் வளரும் தன்மை கொண்டது. இதனுடைய தண்டுப் பகுதி நீர்ச்சத்து கொண்டது இதன் இலைப் பகுதி நீராவி போக்கினை கட்டுப்படுத்த முட்களாக உள்ளது. இலையின் மேற்பகுதியில் மெழுகுப்பூச்சு காணப்படும். இது சூரிய வெப்பத்திலிருந்து தன்னை காத்துக் கொள்கிறது. சப்பாத்திக் கள்ளியின் சதைப் பகுதியைப் பசையாக்கி மாசற்ற நீரில் கலந்து வைத்துப் பரிசோதித்ததில், நீரில் கலந்திருந்த நச்சுக்கள், மாசுப் பொருட்கள், நுண் கிருமிகள் அனைத்தும் அடியில் சென்று தங்கி நீர் தெளிவானதைக் கண்டனர். இதனால் 98% அளவுக்கு நீர் சுத்தமானது தெரிய வந்தது. இதன் மருத்துவப் பலன்களைப் பார்ப்போம்.

#1. பசையாக்கி மேல் பற்றாகப் பயன்படுத்துவதால் உஷ்ணம், வீக்கம் ஆகியன விலகிப் போகும்.

#2. சப்பாத்திக் கள்ளியின் பழங்களை நெருப்பிலிட்டு வதக்கிக் கக்குவான் இருமலுக்குக் கொடுத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

#3. சப்பாத்திக் கள்ளியின் பூக்களைப் புதிதாகவோ அல்லது காய வைத்து உலர்த்தியோ பயன்படுத்துவதால் அது வற்றச் செய்வதற்காகவும், குருதியை உறையச் செய்வதற்காகவும் பயன்படும்.

#4. இதைச் சாப்பிட்டால், வயிற்றை நோகச் செய்து அடிக்கடி மலம் கழிக்க வேண்டி வரும் உணர்வு, குடற் பகுதியில் சேரும் சளித்தன்மையால் ஏற்படும் வலி, PROSTATE GLANDS ஆகிய நோய்கள் குணமாகும்.

#5. அதிகமான FIBER, “CAROTINE” என்னும் மருத்துவ வேதிப் பொருளை மிகுதியாகப் பெற்றுள்ளதாகவும் விளங்குகிறது.

#6. இதை உணவாகப் பயன்படுத்துவதால் கொழுப்புச் சத்து குறைவது மட்டுமின்றி, ஜீரண உறுப்புகள் பலம் பெற்று சீராக இயங்க வழி ஏற்படுகிறது.

#7. “ALZEIMER” என்னும் நோயைப் போக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், உடல் முழுவதிலுமான வீக்கத்தைக் குறைக்கவும் சப்பாத்திக் கள்ளி மருந்தாகிப் பயன் தருகின்றது.

#8. ஒருமுறை சப்பாத்திக் கள்ளியை உணவில் சேர்த்துக் கொள்வதால் நமக்கு ஒரு நாளைக்குத் தேவையான VITAMIN “C” சத்தில் மூன்றில் ஒரு பங்கு கிடைக்கும்.

#9. நோய் எதிர்ப்புச் சக்திக்கு மிகவும் இன்றியமையாதது. ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் உற்பத்தி ஆவதற்கு இது உறுதுணையாகிறது.

#10. சப்பாத்திக் கள்ளியில் உள்ள அதிகமான CALCIUM எலும்புகளை உருவாக்கும் பணியில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் பல், எலும்பு சம்பந்தமான நோய்கள் வராது.

#11. சப்பாத்திக் கள்ளியினின்று பெறப்படும் FIBER உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்புச் சத்தைக் கரைத்து வெளியேற்ற வழி செய்கிறது.

#12. இதிலுள்ள POTASSIUM ரத்த நாளங்களின் அழற்சியைப் போக்கி, ரத்த ஓட்டத்தைச் சீர் செய்து ரத்த அழுத்தம் அதிகம் ஆகாமல் பாதுகாக்கிறது. இதனால் மாரடைப்பு போன்றவையும் தடுக்கப்படுகின்றது.

#13. சப்பாத்திக் கள்ளியில் அதிக அளவிலான FLAVANOIDS, POLYPHENOLS மற்றும் PETALINE ஆகிய வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன.

#14. உடலில் தன்னிச்சையாகச் செயல்பட்டு எங்கேனும் தங்கி புற்றுநோய் உண்டாகக் காரணமாகும் நச்சுக்களை வெளியேற்றும் பணியில் பெரும் பங்கு வகிக்கின்றன. இதனால் புற்று நோய் தவிர்க்கப் பெறுகிறது.

#15. இவை தோலினுடைய ஆரோக்கியத்துக்கும், இளமையில் ஏற்படும் முதுமையைத் தடுப்பதற்கும், ஆண்களின் பார்வை தெளிவுபடுவதற்கும், மூளையின் செயல்பாடுகள் மேம்படுவதற்கும் உதவுகின்றன.

#16. இதைச் சாப்பிட்டால் இதயம் சீராகத் துடிக்கும். ஆணுக்கு அணுக்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு கரு முட்டை நன்றாக வளரும்.

#17. கருவுற்ற பெண்கள் இந்த பழம் சாப்பிட்டால் குழந்தை நல்ல சிவப்பு நிறத்துடனும், நல்ல கோபம், ரோசத்துடனும் இருக்கும்.

#18. இந்த பழம் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். கருப்பை சுத்தம் ஆகும். நீர்க்கட்டி தானாக அழியும். எல்லோருக்கும் நல்லது செய்யும் பழம் இது.

#19. வேறு சில பயனுள்ள இணைப்புகள்: |  Anemia - Home Remedy  |  B12 Deficiency   |  Organic Food Reality  |  Growing Healthy  |  Potato Health Benefits  | 

#NATURALREMEDY நாம் உணவுப் பொருளாகவே அறிந்திராத CACTUS எனப்படும் சப்பாத்திக் கள்ளியில் இருக்கும் மருத்துவப் பலன்களுக்குத்தான் நாம் இதுவரை எழுதியதிலேயே பெரிய ARTICLE போட வேண்டி வந்திருக்கிறது. இப்படி நாம் மறந்த உணவு வகைகள் அதிகம் என்பதால், அதை மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்க்கவே இந்த முயற்சி. பகிருங்கள்!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top