#CITIZENSREGISTER: NATIONAL REGISTER OF CITIZENS எதற்காக??? கலவர பூமி ஆகிறதா இந்தியா??? இதனால் என்ன நடக்கும்???
  • 07:30AM Mar 01,2020 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 07:30AM Mar 01,2020 Chennai

பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு INDIAN CITIZENSHIP அளிக்கப்படும் என்று பாஜக தனது நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, 1955-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, 2016-ம் ஆண்டு குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கொண்டு வந்தது. இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. இருப்பினும், சில காரணங்களுக்காக ASSAM மாநிலத்தில் மட்டும் முதல்கட்டமாக இந்த NRC செயல்படுத்தப்பட்டது. மக்களவை பதவிக்காலம் முடிவடைந்தவுடன், அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது. மீண்டும் ஆட்சியமைத்த பாஜக வந்ததும் வராததுமாக NRC-யை ASSAM-ல் IMPLEMENT செய்ததும், அதில் இஸ்லாமியர் என்ற காரணத்திற்காக INDIAN ARMY-யில் பணியாற்றிவர்களின் பெயர்கள் கூட NRC-யில் இல்லை போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது.

nrc0.jpg

இருந்தபோதிலும், புதிதாகக் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்படும் என்று மோடி அரசு அறிவித்தது. இந்த முறை ASSAM மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான NATIONAL REGISTER OF CITIZENS கணக்கெடுக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய மந்திரிசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் இந்துத்துவா கொள்கையைக் கைவிடப் போவதில்லை என்று அறிவித்திருந்து சிவசேனாவே இந்த விவகாரத்தில் திடீர் என்று, மத்திய அரசின் குடியுரிமை திருத்த மசோதா மறைமுகமாக இந்து – முஸ்லிம் பிரிவினையை உருவாக்குவது போல் உள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளதால் தற்போது இந்தப் பிரச்சினை  மேலும் பரபரப்பாகி விட்டது.

nrc1.jpg

சிவசேனாவின் சாம்னா நாளிதழின் தலையங்க பக்கத்திலேயே, “இந்தியாவில் ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மத்திய அரசின் குடியுரிமை திருத்த மசோதா புதிய பிரச்சினையாக உருவாகி உள்ளது. இந்த மசோதா மூலம் சட்டவிரோதமாகப் புலம் பெயர்ந்த இந்துக்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஏற்றுக் கொள்வது நாட்டில் மதப்போருக்கு வழி வகுக்கும் செயலாகத் தெரிகிறது. நாட்டின் நலனுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுவது போல் இல்லை. இது வாக்கு வங்கி அரசியலுக்காகவும், இந்து–முஸ்லிம் இடையே மறைமுகமாகப் பிரிவினை உண்டாக்குவதும் போன்று தெரிகிறது” என்றே பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டது. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களில் கூட மதப்பிரிவினைவாதம் பேசுவது இந்தியாவின் SECULARISM என்ற அடிப்படைக் கோட்பாட்டையே சிதைப்பது போல இருக்கிறது. ஆனாலும், மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்வது யார்??? சொன்னாலும் புரியுமா???

NRC Assam List  |  10% Reservation  |  Triple Talaq  |  Anti Bribe Amendment  |  Lok Ayukta  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top