#MOBILITYCARD: நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்ய, இந்த CARD இருந்தால் போதுமாம்!!!
  • 18:03PM Jan 27,2020 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 18:03PM Jan 27,2020 Chennai

மத்திய அரசு அனைத்து துறைகளிலும் DIGITAL TRANSACTION-ஐ ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி DIGITAL நடைமுறைகளைப் புகுத்த முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், TRANSPORT-ஐ DIGITAL மயமாக்கும் விதமாகக் கடந்த MARCH மாதம் “ஒரே நாடு ஒரே CARD” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தின் கீழ், NATIONAL LEVEL-ல் இயங்கும் BUS, METRO RAIL கட்டணம், TRAIN TICKET, PARKING, SHOPPING என்று அனைத்திற்கும் ஒரே CARD-ஐப் பயன்படுத்தி TICKET FARE செலுத்த முடியும். இந்தத் திட்டத்தை CHENNAI METRO RAIL-ல் செயல்படுத்த அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். BANK-களில் வழங்கப்படும் DEBIT CARD போலவே இந்த CARD-ஐப் பயன்படுத்தி METRO RAIL-ல் TICKET FARE-ஐச் செலுத்த முடியும்.

travel0.jpg

NATIONAL COMMON MOBILITY CARD என்று அழைக்கப்படும் இந்த CARD-ஐப் பயன்படுத்தி அனைத்து TRANSPORT-லும் எளிதாகப் பணம் செலுத்த முடியும். CHENNAI METRO RAIL-ல் இதை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. DELHI METRO RAIL-ல் சோதனை முறையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக, கொச்சியில் இத்திட்டம் உள்ளது. தற்போது, CHENNAI METRO RAIL-ல் இந்த CARD-ஐப் பயன்படுத்தும் வகையில் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, METRO TRAIN STATION-ல் உள்நுழையும் இயந்திரத்தில் CARD-ஐ SWIPE செய்தாலே போதும். அதற்கான FARE பதிவாகிவிடும். BANK ACCOUNT-ல் இந்த CARD இணைக்கப்படுவதால் TRANSPORT-க்கு  நாம் எவ்வளவு செலவு செய்துள்ளோம் என்பதன் விவரமும் தெளிவாகத் தெரிந்துவிடும். மாதாந்திர  BANK STATEMENT-லேயே METRO-வில் பயணம் செய்த விவரங்களும் பதிவாகிவிடும்.

travel1.jpg

மிகப்பெரிய நடைமுறை என்பதால் CHENNAI METRO-வில் இதை முழுமையாக நடைமுறைப்படுத்தக் குறைந்தது 8 முதல் 10 மாதம் வரையில் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதெல்லாம் சரிதான். ஆனால், TRANSPORT முதற்கொண்டு எல்லாவற்றையும் BANK ACCOUNT-ல் இணைக்க வேண்டும் என்று சொல்வதுதான் சற்று நெருடலாக இருக்கிறது. ஏற்கெனவே SAME BANK TRANSACTION-களுக்கே BANK-கள் காசு பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இனி இதையும் சாக்காகப் பயன்படுத்தி, இன்னும் கூட அதிகமாகக் காசு பிடுங்க ஆரம்பித்துவிடுவார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!!!

Lamb Transport App  |  Nextgen Transport  |  Crew Dragon Transport  |  Travel Tips  |  Deccan Odessey  | 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top