POLLACHI RAPE CASE: CBCID விசாரணை துவக்கம்!!! DGP-க்கு NATIONAL COMMISSION FOR WOMEN நோட்டீஸ்!!!
  • 18:21PM Mar 13,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 18:21PM Mar 13,2019 Chennai

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நான்கு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளனர். அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் அரசியல் கட்சிகளும் போராட்டங்களை அறிவித்து வருகின்றன. தமிழகமெங்கும் கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு CBCID-க்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக CBCID போலீஸார் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். I.G.SREEDHAR தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை தேவை எனத் தமிழக DGP-க்கு மகளிர் ஆணையம் NOTICE அனுப்பியுள்ளது. அதில், “இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு VIDEO-க்கள் மற்றும் தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக என்ன விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது, எந்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை யார் நடத்துகின்றனர். வழக்கின் நிலைமை என்ன என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராகக் குரல்கள் வலுத்து வரும் நிலையில், தற்போது மகளிர் ஆணையத்தின் NOTICE முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Top