Highrise

என்னங்க எவ்ளோ அண்ணாந்து பார்த்தாலும் போய்கிட்டே இருக்குது? இவ்ளோ பெரிய உருவத்தை வச்சி எப்படி பண்டிகை கொண்டாட முடியும்?

Jun 24 2021 11:38:00 AM

இயற்கையின் மிகப்பெரிய அதிசயப்பிறவிகள் என்றால் அது நிச்சயம் மரங்கள் தான். மரங்கள் ஒரே இடத்தில் இருப்பதால் அதற்கு உயிர் இல்லை என்று எண்ணிவிட முடியாது. மனிதன் முதல் பல ஜீவ ராசிகளும் சுவாசித்து உயிர்வாழ தேவையான சுத்தமான காற்றை மரங்கள் தான் வழங்குகிறது. மரங்களில் ஏகப்பட்ட வகைகள் உள்ளன. ஒரு சில மரங்கள் வானத்தை தொடும் அளவுக்கு கூட உயரமாக வளரும் தன்மையுடையது. அந்த லிஸ்டில் உள்ள ஒரு மரம் தான் நோபிள் பிர் (Noble Fir).

naple-tree

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஒரு இடத்தில் இந்த நோபிள் பிர் மரம் மிக உயரமாக வளர்ந்து நிற்கிறது. இந்த மரத்தின் உயரம் கிட்டத்தட்ட 90 மீட்டர்கள் இருக்கிறது. அதாவது சுமார் 295 அடி உயரத்தில் உள்ளது. பொதுவாக இந்த வகை மரங்கள் எல்லாம் 130 முதல் 230 அடி உயரம் மட்டுமே வளரும் தன்மை கொண்டது. இந்த மரம் அதைவிட பலமடங்கு உயரமாக உள்ளதால் உலகிலுள்ள உயரமான மரங்களின் பட்டியலில் ஒன்றாக கருதப்படுகிறது.

naple-tree

அமெரிக்க மக்கள் இந்த மரங்களை பெரும்பாலும் கிறிஸ்மஸ் மரமாக பயன்படுத்துவது வழக்கம். பண்டிகை காலத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்டு எல்லா இடங்களிலும் இந்த மரங்கள் காட்சிப்படுத்தப்படும். இந்த சிறப்பு மிக்க மரம் எவ்வாறு இவ்வளவு உயரம் வளர்ந்தது என்று தான் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை.

naple-tree