Shoreline

இந்த விஷயத்தில் இவ்வளவு நாட்களாக பெண்களுக்கு இருந்த இட ஒதுக்கீடு இப்போது ஆண்களுக்கும் கிடைத்து விட்டது! என்ஜாய் பண்ணுங்க ஆண்களே!

Apr 16 2021 07:35:00 PM

பெண்கள் எப்போதுமே அலங்கார பிரியைகள். எப்போதும் மேக்கப் போட்டுக்கொண்டே சுற்றுவது, விரல்களில் பாலிஷ், முகத்திற்கு பவுடர், கிரீம், உதடுகளுக்கு லிப்ஸ்டிக் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் ஆண்களுக்கு அப்படி எதுவுமே செய்ய தேவையில்லை. இயற்கையாகவே அழகானவர்கள் ஆண்கள். இருந்தபோதிலும் தற்போது பெண்களுக்கு சவால் விடும் விதத்தில் ஆண்களும் பலவித நெய்ல் ஆர்ட்டுகள் போட்டுகொண்டு உலாவர தொடங்கிவிட்டனர்.

nail-art

நகங்களில் பெண்கள் பாலிஷ் போடுவது போல ஆண்களும் போட்டுக்கொள்ளலாம். இதை ஒரு சில பெண்கள் கேலி செய்வதால் பெரும்பாலான ஆண்கள் விரும்புவதில்லை. தற்போது பாலிஷையும் தாண்டி நெய்ல் ஆர்ட் என்ற விஷயம் பிரபலமடைந்து வருகிறது. ஆரம்பத்தில் பெண்கள் மட்டுமே நெய்ல் ஆர்ட் போட்டுவந்த நிலையில் அது இப்போது ஆண்களையும் ஈர்த்துள்ளது. இதை பார்த்தவுடன் யாரும் கேலி செய்ய முடியாத வகையில் இருக்கிறது. விரல்களில் கார்ட்டூன் உருவங்கள், மலர்கள், விலங்குகள், பழங்கள் மற்றும் ஸ்மைலி போன்றவை அழகாக வரையப்படுகின்றன.

nail-art

விரலில் பாலிஷ் போட்டு அதற்கு மேல் பல வண்ண நிறங்களில் கோடுகள் வரையப்பட்டு இந்த ஆர்ட்டுகள் போடப்படுகிறது. இந்த நெய்ல் ஆர்ட் மூலம் பெண்களுக்கு இணையாக ஆண்களும் விரல்களை அழகுப்படுத்தி டிசைன் போட்டுக்கொண்டு மகிழ்ச்சியுடன் சுற்றி திரியலாம். ஏகப்பட்ட டிசைன்கள் இருப்பதால் அவரவர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.