மர்மக் காய்ச்சல்!!!
  • 11:39AM Sep 23,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 11:39AM Sep 23,2017 Chennai, Tamil Nadu 600003, India

கடந்த சில வருடங்களாக நிறையப் பேரை – குறிப்பாக குழந்தைகளை பலி வாங்கியிருக்கும் ஒரு வித்தியாசமான நோய் இந்த மர்மக் காய்ச்சல்.  பெயரைப் போலவே தன்னுள்ளே பல மர்மங்களை வைத்துக் கொண்டிருப்பதாலேயே என்னவோ இதன் பெயர் மர்மக் காய்ச்சலாக இருக்கிறதோ என்னவோ??? சில மாதங்களுக்கு முன் அனைத்துப் பள்ளிக்குழந்தைகளும் தடுப்பூசி போடுவதாக அரசு அறிவித்து, அது என்ன ஊசி என்று பெற்றோர் கேள்வி எழுப்பும் போது பதிலளிக்காமல் பிரச்சனை வந்ததை அனைவரும் அறிவோம்.  அரசு இறுதியாக ஒரு மருந்தினைக் (ரூபெல்லா அம்மை நோய் தடுப்பு) காட்ட, மருத்துவர்கள் அதற்கு நற்சான்று தர, பின்னர் பெற்றோர் ஒப்புக் கொண்டதையும் பார்த்தோம்.

முதற்கட்டமாக ஊசி போடும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருக்கும் மருந்தும், பின்னர் அரசு காண்பித்த மருந்தும் வேறு என்றும் கூட சிலர் போராடி அடங்கியதையும் கேள்விப்பட்டோம். இப்போது நினைவூட்டல் விடுத்து நிகழ்காலத்திற்கு வாருங்கள். கேள்விகள் கீழே,

  1. இப்போது ரூபெல்லா அம்மைக்கு ஊசி போட்ட பிறகு மர்மக் காய்ச்சலினால் குழந்தைகள் இறப்பு குறைந்துள்ளதே, அப்படி என்றால் ரூபெல்லா தான் அந்த மர்மக் காய்ச்சலா??? எனக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.  ஏனெனில், காய்ச்சல் வேறு அம்மை வேறு என்பது அனைவருக்கும் தெரியும்.
  2. மூன்று தினங்களுக்கு முன் திடீரென்று புயல் ஏற்பட்ட போது கூட 24 மணி நேரத்தில் வர்தா எனப் பெயரிட்ட நமக்கு, இன்னும் ஏன் மர்மக் காய்ச்சல் என்ற பெயரே இதற்கு நீடிக்கிறது என்ற கேள்வி எழுந்தால் தவறா???
  3. ஜெர்சிப் பாலில் உள்ள ஒரு வேதிப் பொருள்தான் இரண்டரை வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு மர்மக்காய்ச்சலாக மாறிப் போனது என்கிற வாதம் நிஜமா, பொய்யா??? பொய் எனில் மர்மக் காய்ச்சலுக்கான மரணத்தின் விகிதத்தில் குழந்தைகள் அதிகளவில் இருப்பது ஏன்?
  4. பாலில் கலப்படம், அது இதுவென அமைச்சர் ஒருவரே கூறியிருக்கும் போது, மர்மக் காய்ச்சலுக்கும் குடிக்கும் பாலுக்கும் சம்பந்தம் இல்லையென்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறதா, இல்லையா???
  5. காய்ச்சலுக்கான பெயரே மர்மமாக இருக்கும் போது, எந்த அடிப்படையில் மருத்துவம் பார்க்கப்படுகிறது?

கடைசியாக மக்களிடம் ஒரு கேள்வி, இதில் எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்காது என்ற நம்பிக்கை, கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா???

Top