இந்தியாவில் உள்ள மர்மங்கள் நிறைந்த கோயில்கள்.!
  • 12:13PM Nov 16,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 12:13PM Nov 16,2017 Chennai, Tamil Nadu 600003, India

 நம் நாட்டின் சரித்திரத்திற்க்கு அடையாளமாக இருப்பது நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இறைவனுக்காகக் கட்டிய கோயில்கள் தான்..ஆனால் அதில் சில கோயில்கள் பல ரகசியங்களும்,பல மர்மங்களும் நிறைந்து இன்றும் சிறப்புடன் இருக்கிறது...அப்படிப்பட்ட பிரசித்தி பெற்ற கோயில்களைப் பற்றிப்பார்ப்போம்...!

 

1.வீரபத்திரன் திருக்கோயில்

 Related image

Image result for lepakshi temple

  ஆந்திரா மாநிலம் அனந்தபுரில் உள்ள லிபாக்க்ஷி என்னும் இடத்தில் உள்ளது இந்தக் கோயில்.மிகவும் ப்ரேசித்தி பெற்ற இந்தக் கோயிலில் என்ன அதிசயம் என்றால்,இங்கிருக்கும் தொங்கும் தூண்கள் தான்..இங்கிருக்கும் தூண்கள் தரையில்படுவதில்லை.

 

2.கடு மல்லேஸ்வர திருக்கோயில்

   Image result for kadu malleshwara temple

  1997 ஆம் ஆண்டு இந்தக் கோயிலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டவர்கள்,இந்தக் கோயில் பக்கத்தில் ஒரு நந்தி சிலையை கண்டுபிடித்துள்ளனர்.! அதுமட்டும் இல்லது நந்திக் கிடைத்த அந்த இடத்தை மேலும் தோண்டியபொழுது  ஒரு குளமும் கண்டறியப்பட்டுள்ளது..இதில் அதிசயம் என்னவென்றால் அந்த நந்தி சிலையின் வாயிலிருந்து,சிவன் சிலைக்கு தானாகத் தண்ணீர் ஊற்றுகிறது..ஆனால் இந்த நீர் வரும் மூலம் எங்கிருந்து வருகிறது என்று இன்றும் தெரியவில்லை.!! இந்தக் கோயில் கர்நாடக மாநிலம் பெங்களூரில்  உள்ளது.!

 

 

3.பொருவுடையார் திருக்கோயில்

  Related image

   தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இந்தச் சிவன் கோயில் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.! இந்தக் கோயில் முழுக்கமுழுக்க கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது.ஆனால் இந்தக் கோயில் உள்ள பகுதிகளை சுற்றி கிரானைட் கற்கள் இருந்ததற்கு ஒரு அறிகுறியும் இல்லை.

 

4.ஸ்தம்பேஸ்வர் திருக்கோயில்

Image result for gujarat shiva temple

   குஜராத் மாநிலத்தில் உள்ள இந்தக் கோயில் மறையும் கோயில் என்று அழைப்பார்கள்.,காரணம் பகலில் காணப்படும் இந்தக் கோயில் இரவில் கடலில் மறைந்துவிடும்..

 

5.அனந்த பத்மநாப சுவாமி திருக்கோயில் 

Related image

  திருவனந்தபுரத்தில் உள்ள இந்த விஷ்ணு கோயிலில் மர்மம்மிக்க ஏழு ரகசிய அறைகள் உள்ளது. இதுவரை ஆறு ரகசிய அறைகள் திறக்கப்பட்டுள்ளது.! கடைசியாகத் திறந்த அறையிலிருந்து பல கோடிகள் மதிப்பிலான தங்க நாணயங்கள்,வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.! 7 ஆம் அறையைத் திறந்தால் சில அழிவுகள் ஏற்படும் என்று வரலாறுகள் கூறுகிறது.!

  

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top