#Nandhini : மைனாவின் இரண்டாம் திருமணம் !!!
  • 06:50AM Jun 08,2019 Chennai
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 06:50AM Jun 08,2019 Chennai

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மைனா என்ற கதாபாத்திரம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை நந்தினி.இவரின் இயற்பெயரான நந்தினி என்பது பலருக்கு இன்றும் தெரியாது அந்தளவிற்கு அவர் நடித்த மைனா கதாபாத்திரம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது

myna.jpg

கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி மற்றும் ரோமியோ ஜூலியட் போன்ற  படங்களில் நடித்துள்ளார் தற்போது அரண்மனைக்கிளி, சின்னத்தம்பி ஆகிய விஜய் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.மைனா நந்தினி சென்னையில் ஜிம் நடத்தி வந்த கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து, இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்களுக்குள் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விடலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

myna4.jpg

பின்னர் மைனா நந்தினி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் திடீரென ஒருநாள் கணவன் கார்த்திகேயன் லாட்ஜ் அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.ஆனால் மைனா நந்தினி கணவர் இறந்த விஷயம் அறிந்தும் கூட கணவர் இறந்ததை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாத மைனா நந்தினி, தனது கணவர் இறந்த சில நாட்களிலேயே மீண்டும் தொலைக்காட்சி தொடரில் நடிக்கத் தொடங்கினார்.

myna6.jpg

இந்நிலையில் மைனா நந்தினி சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நாயகி சீரியல் நடிகர் ஒருவரை காதலிக்கிறார் என்று பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில் விமர்சனம் செய்பவர்களால் என்னை புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொருதருக்கும் தனித்தனியாக புரிய வைக்க எனக்கு அவசியமும் கிடையாது. நான் நானாக எப்போதும் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

Share This Story

துரை முருகன்

Top