அப்பாவின் அறிவுரை…
  • 06:17AM Nov 01,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 06:17AM Nov 01,2017 Chennai, Tamil Nadu 600003, India

நான் படித்து முடித்துவிட்டு வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் ஒரு இளைஞன்.  திருமணமாகி சில ஆண்டுகள் ஆகி விட்டது.  நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.  இன்று யோசிக்கும் போது அது எந்த அளவுக்கு என்று புரிகிறது.  மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும் என்று இங்கே போஸ்ட் போடுகிறேன்.  அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு குறிப்பிட்ட வயது வந்த பிள்ளைகளுக்குத் தந்தை ஒரு நண்பனாகச் சில விஷயங்களைப் பேசுவார்.  Man to man Gentleman Talk. அப்படி ஒரு சம்பவம் என் வாழ்க்கையில் 9ம் வகுப்பு படிக்கும் போது நடந்தது.

பொதுவாக அதிகம் பேசாமல் இருக்கும் என் தந்தை அன்று வேறு மாதிரி பேசிக் கொண்டிருந்தார்.  நான் போகும் இடங்களில் எல்லாம் பின்னால் நடந்தது கொஞ்சம் வேடிக்கையாக இருந்தாலும் மனது மட்டும் எச்சரிக்கையாக, போன வாரம் நான் செய்தவைகளில் அப்பா காதுக்கு எது வந்திருக்கும், வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்துக் கொண்டிருந்தது.

பிறகு நானே அவரிடம் என்ன விஷயம் என்று வெளிப்படையாகக் கேட்க, வழக்கத்திற்கு மாறாக பெண்களைப் பற்றியும், காதலைப் பற்றியும் பேசியது உண்மையிலேயே அதிர்ச்சிதான்…  அந்த வயதில் இந்தக் கேள்வியை நான் எதிர்பாராமல் இருந்ததால் சற்று சங்கடமாகத்தான் இருந்தது.  இப்போ எதுக்கு இதெல்லாம் என்று கேட்ட பொழுது அவர் சொன்ன பதில்தான் என்னைச் சற்று யோசிக்க வைத்தது என்று கூடச் சொல்லலாம்.  அவர் சொன்னது அப்படியே இதோ…

அப்பா : சொல்ல வேண்டியது கடமை சொல்லிடறேன்… இந்த வயசுல பொண்ணுங்களை பார்க்காத பேசாதன்னு சொன்னா, கொடுமைப்படுத்தறதாத்தான் தோணும்.  வயசு அப்படி… ஆனா, அடுத்த வருஷம் பெரிய பரிட்சை இருக்கு… அதுல ஜெயிச்சு அதுக்கப்புறம் வர்ற ப்ளஸ் டூல ஜெயிச்சாத்தான் வாழ்க்கைல செட்டிலாக முடியும்.  இந்த வயசுல காதல் வரும். ஆனா, அது பப்பி லவ். ரொம்ப ஸ்வீட்டா இருக்கும், ஏன்னா லவ் னா என்னன்னு தெரிஞ்சுக்க ரெண்டு பேருமே ஆர்வமா இருப்பீங்க… பெரும்பாலும் இது இரண்டு மூணு வருஷத்துல காணாமப் போயிடும்.  காரணம், நீ சரியா படிக்கலை, புரிஞ்சுக்கலைன்னு நிறைய வரும்.  ஏன்னா, ரெண்டு பேருக்குமே இதைப் பத்தி ஒண்ணும் தெரியாது. 

மறுபடி கொஞ்சம் விவரம் புரியும் போது மனசு நமக்கு ஏத்த மாதிரி பொண்ணைத் தேடும்.  ஆனா, அப்போ நீ ப்ளஸ் டூ படிச்சிட்டிருப்பே… அந்தக் காதல் பெரும்பாலும் ப்ளஸ் டூல தோத்த உடனே காணாமப் போயிடும்.  இல்லை அவ இஞ்சினியரிங், நீ அட்டெம்ட்னு வேற மாதிரி போகும்.  கொஞ்ச நாள்ல உனக்கே தாழ்வு மனப்பான்மை வந்து விலகிட ஆரம்பிச்சுடுவே… ஸோ, நல்லாப் படி, ப்ளஸ் டூ முடி… காலேஜ்ல பசங்க கூட நல்லா என்ஜாய் பண்ணு… ஒருவாட்டி க்ராஸ் ஆயிட்டா, காலேஜ் லைப் மறுபடி கிடைக்காது.  வேலைக்கு போக ஆரம்பிச்ச பிறகு, லவ் னா என்னன்னு தெரிஞ்ச, மெச்சூர்டான பொண்ணுங்க நிறைய உங்கூட வேலை பார்க்கும்… ஜாதில்லாம் பார்க்காதே, பிடிச்சா லவ் பண்ணு… கல்யாணம் பண்ணிக்கோ… அதுதான் நிலையா நிற்கும்…”

சொல்லிட்டு அப்பாடா ஒருவழியா சொல்லிட்டோங்கற மாதிரி நிம்மதியோட இறங்கிப் போய்ட்டாரு.  நான் ரெண்டு நாள் குழம்பி, அப்புறம் அப்பா சொன்ன மாதிரி நடந்துக்கலாம்னு முடிவு பண்ணினேன்.  இன்னைக்கு எம். காம்., எனக்கு லவ் மேரேஜ் தான்.  வீட்டில எல்லாரும் கொண்டாடுற மருமக… பெங்காலிப் பொண்ணு வேற… வாழ்க்கைல நல்ல அன்டர் ஸ்டான்டிங், பரஸ்பர நம்பிக்கை இதெல்லாம் இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பாருங்க… எப்படி இவங்க மட்டும் எந்தக் கஷ்டம் வந்தாலும் ஜாலியா சிரிச்சுட்டு இருக்காங்கன்னு எங்களை பார்க்கிறவங்க பொறாமைப்படற லைப்.  இத்தனை நாளைக்கப்புறம் யோசிக்கும் போதுதான் தெரியுது எனக்கு…

“ஒரு வேளை பப்பி லவ்வையே கல்யாணம் பண்ணியிருந்தா???”

என் கனவைப் புரிஞ்சுகிட்டு சப்போர்ட் பண்ற பொண்டாட்டி கிடைச்சிருக்க மாட்டா, நானும் உங்க முன்னாடி இப்படி எழுதிட்டும் இருந்திருக்க மாட்டேன்… தேங்க் காட்…

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top