குழந்தைகளுக்கு அவசியம் சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள்!!!
 • 14:18PM Nov 17,2017 Chennai, Tamil Nadu 600003, India
 • Written By KV
 • Written By KV
 • 14:18PM Nov 17,2017 Chennai, Tamil Nadu 600003, India

       நாம நம்ம குழந்தைகளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கப் போறோமோ, அதான் அவங்க எதிர்கால வாழ்க்கைன்னு ஆகிடும். ஏன்னா, இன்னைக்கு நாடு போற போக்கைப் பார்த்தா அவங்களை நம்ம கைக்குள்ளயே வச்சுப் பாதுகாத்தாலும் வேலைக்காவாது போல… ஸ்கூல்ல ஆரம்பிச்சு, வேலைக்குப் போய் செட்டில் ஆனாக்கூட எசகுபிசகா ஏதாச்சும் பிரச்சினைல மாட்டிக்கிறாங்க.  அதுக்கு முக்கியமான ரெண்டு காரணம், ஆர்வக் கோளாறு அப்புறம் பிரச்சினைகளை சமாளிக்கத் தெரியாம இருக்கிறது.  மார்க்கீய சித்தாந்தங்களை உலகுக்குக் கொடுத்த கார்ல் மார்க்ஸ் அவரோட சின்ன வயசுல ஒரு சட்டையை ரொம்ப பிடித்தமானதா வச்சிருந்தாரு.  அவரோட அப்பா அதை கவனிச்சுட்டு, மார்க்ஸ்கிட்ட அந்த சட்டையை உனக்கு ரொம்பப் பிடிக்குமான்னு கேட்க, இவரும் ஆமான்னு சொல்லியிருக்காரு.  அந்த சட்டையை எடுத்துட்டு வரச் சொல்லி, அவங்கப்பா அவரு கண்ணு முன்னாடியே சுக்கல் சுக்கலா கிழிச்சுப் போட்டுட்டு “பொருட்கள் மேல பற்று வைக்காதே, மனுஷங்க மேல வை…” சொன்னாராமா.  இதை கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டு, “அன்னைக்கு அவரு அப்படிச் செய்யாம இருந்திருந்தா, பொதுவுடைமையை விட்டு நான் எங்கேயோ போயிருப்பேன்…” னு சொல்வாராமா…

       அதனால, இன்னைக்கு நம்ம பசங்களுக்கு என்ன சொல்லித் தரோங்கறதுதான் நாளைக்கு அவங்க எப்படி இருக்கப் போறாங்கங்கறதுக்கு அஸ்திவாரமே…

 1. வாழ்க்கையில எதுவுமே சும்மா கிடைக்காதுன்னு கத்துக் குடுங்க. 
 2. ஏமாற்றம்னா என்ன, அதை எப்படி எதிர்கொள்றதுன்னு சொல்லிக் குடுங்க.
 3. தன்னம்பிக்கையை சொல்லிக் குடுங்க. ஏதுவுமே முடிவு இல்லைன்னு பதிய வையுங்க.
 4. இன்னைக்கு பெரியவங்களை விட சின்னக் குழந்தைங்கதான் எல்லா விதமான தப்பு பன்றவங்களுக்கும் முக்கியமான டார்கெட்டா இருக்கிறாங்க… ஸோ, தற்காப்பு கத்துக் குடுங்க.
 5. பாலியல் தொந்திரவுகளை அடையாளம் காண வசதியா, வயசுக்கேத்த மாதிரி குட் டச், பேட் டச் – (யாரா இருந்தாலும் எப்படிப்பட்ட தொடுதல் நல்லது, எப்படிப்பட்ட தொடுதல் கெட்டது)-ன்னு சொல்லிக் குடுங்க.  அவங்க நியாயமா எதிர்த்துப் போராடுறதுக்கான வாய்ப்பைக் குடுங்க.
 6. எதிர்பாலினத்தவரைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமா அந்த வயசுக்கு என்ன தெரியனுமோ அதைத் தெரியப்படுத்துங்க.  அவங்களும் நம்மள மாதிரி மனுஷங்கதான், அவங்களுக்கும் மனசிருக்குன்னு சொல்லிக் குடுங்க.
 7. காதல்ங்கிறதுல தோல்வி சகஜம்னு புரிய வையுங்க… உங்களைப் பற்றியே கூட நீங்க சொல்லி, அதைப் பற்றிப் புரிய வச்சிட முடியும்.  சங்கடமா இருந்தா, உங்க ப்ரெண்ட்டுக்கு நடந்த சம்பவங்களாக் கூடச் சொல்லலாம். 
 8. நம்பிக்கைன்னா என்ன, அதைக் காப்பாத்தறதுன்னா என்னன்னு சொல்லிக் குடுங்க.
 9. மனிதாபிமானத்தோட, மனுசங்களோட குணத்தையும் சொல்லிக் குடுங்க.
 10. அதி முக்கியமான விஷயம், பஞ்சுவாலிட்டி.  அது எப்பேர்ப்பட்ட இடத்துலயும் நமக்கு நல்ல பேர் வாங்கிக் குடுத்துடும்.
 11. எப்பப் பாரு பணம், பணம்னு ஓட சொல்லிக் குடுக்காதீங்க.  சுத்தியிருக்கிற நல்ல விஷயங்களுக்கும் நேரத்தை ஒதுக்க சொல்லிக் குடுங்க.
 12. எல்லாத்துக்கும் மேல, வாழ்க்கையில எல்லாத்துக்கும் மேல குடும்பம்னு புரிய வையுங்க.
 13. மனிதாபிமானத்தை மத்தவங்க முட்டாள்தனமா பயன்படுத்திக்குவாங்க, ஜாக்கிரதையா இருக்கனும்னும் சொல்லிக் குடுங்க.
 14. மதங்களை மதிக்கக் கத்துக் குடுங்க…

என்னது படிப்பா??? அவங்க தேடட்டும் தனக்கு என்ன தேவைன்னு… அதுலதான் அவன் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் எப்பவும் இருப்பான். வல்லவனா மட்டுமில்லை, நல்லவனாகவும் வளர்த்துங்க பசங்களை… அப்போத்தான் இனி வர்ற காலத்துல எல்லாம் Survive பண்ண முடியும்.  காரணம், இப்போவே விவரமா இருக்கிற முதலாளிங்க எல்லாம் நம்ம பசங்க வளர்ந்து வர்ற நேரத்துல இன்னும் ரொம்பத் தெளிவாய்டுவாங்க.  அப்போ, நம்பிக்கையான, நல்ல திறமையான ஆளுங்களை மட்டும்தான் கூட வச்சிக்கனும்னு யோசிக்க ஆரம்பிச்சிடுவாங்க.  அதுக்கு இப்போ இருந்தே ட்ரெய்னிங் குடுக்கிறதுதான நமக்கு நல்லது??? 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top