கடவுள் துகள் என்றால் என்ன???
  • 11:53AM Sep 15,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 11:53AM Sep 15,2017 Chennai, Tamil Nadu 600003, India

அணுத்துகள் கோர்வை சம்பந்தமான இயற்பியல், தற்போது ஒரு புதிய கண்டுபிடிப்பின் மூலம் புத்துயிர் பெற்றிருக்கிறது. அது ஹிக்ஸ் பாஸன் எனப்படும் கடவுள் துகள்.  கடவுள் துகள் எனச் செல்லமாக இது அழைக்கப்படுவதற்குக் காரணம் லியன் லெடர்மேன் பதிப்பித்த “கடவுள் துகள் : பிரபஞ்சம் பதிலானால், அதற்கான கேள்வி என்ன” (Gods Particle : If Universe is the answer, what is the Question??) என்ற புத்தகத்தின் பாதிப்புதான். 

அணுக்கள் சிதைவடையும் போது அதீத வெப்பம் மற்றும் அதிர்வுகள் ஏற்படும் என்பது நாம் அனைவருமே அறிவோம்.  இருப்பினும் அந்தச் சிதைவின் போது துணைபுரியும் சில துகள்கள் இருந்தேயாக வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் நெடுநாள் கருத்து.  ஏனெனில், அது சரியாகப் புரிய வைக்கப்படாமல் போகும் பட்சத்தில் - அண்டவெடிப்பில் ஆரம்பித்து, பூமியில் உயிர் தோன்றியது, கருங்குழி, அண்ட சராசரம் போன்ற அனைத்தையும் நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விடும்.  அதனால் அதன் துணைத் துகள்களை;f கண்டறியும் முயற்சியில், தற்செயலாகக் கிடைத்த ஒரு வெற்றியே இந்தக் கடவுள் துகள் கண்டுபிடிப்பு.

சுவிஸர்லாந்தில் சமீபத்தில் 27 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்ட பெரிய ஹாட்ரான் கொல்லைடர் (Large Hadron Collider – LCH) துகள் முடுக்கிப் (Particle Accelerator) பரிசோதனையில், ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்தத் துகள்கள் கண்டறியப்பட்டன.  உண்மையில், இரண்டு விதமான துகள்கள் கண்டறியப்பட்டது.  ஆனால், பாஸன் விதிகளின் கீழ் கண்டறியப்பட்ட இந்தக் கடவுள் அணு முக்கியமானது. காரணம், அதன் தன்மைகள்.  புவியீர்ப்பு எதிர்ப்பு மற்றும் அணுச்சிதைவை நிலை ஆற்றலாக மாற்றக் கூடிய தண்மை இந்தத் துகளுக்கு இருப்பதாகவும் கணிக்கப்படுகிறது. 

வேற்றுக் கிரக வாசிகளைப் பற்றிய கட்டுரையில், நான் குறிப்பிட்டிருந்த மாதிரி இவை தற்செயலாய் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஒருபுறம் இருந்தாலும், இந்தத் துகளைப் பற்றிய தெளிவான அறிவு - கண்ணுக்கு புலப்படாத பாதுகாப்பு வளையம், ஒளியை விட அதிக வேகத்தில் பயணித்தல், மிகை ஆற்றல் போன்றவற்றை நமக்கு அளிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் இருக்கிறது. வரலாற்றிலேயே இது போன்ற ஒரு துகளை இப்பொழுதுதான் முதன் முறை கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது.

எது எப்படியோ, கடவுள் அணு என்ற கையோடு நம்மவர்கள் காஞ்சீபுரம் அருகே அதற்காகக் கோயில் ஒன்றைக் கட்டி, அந்த LCH படத்தையே கடவுளாகவும் வைத்து கும்பிடுவதைக் கேள்விப்படும் போது என்ன சொல்வதென்றே புரியவில்லை.  அந்த LCH-ஐ நேரில் பார்க்க புனித யாத்திரை செல்ல வழி செய்யுமாறு அரசாங்கத்திற்கு இவர்கள் கோரிக்கை வைத்தது எல்லாம் தனிக் கதை.  

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top