வேற்றுக் கிரகவாசிகள் – ஒரு பார்வை!!!
  • 09:04AM Sep 16,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 09:04AM Sep 16,2017 Chennai, Tamil Nadu 600003, India

பெரும்பான்மை மக்களுக்கு, குறிப்பாக அமெரிக்காவில் வாழ்பவர்களுக்கு தங்கள் அரசாங்கம் இந்த விஷயத்தில் பொய் சொல்வதாகவே நினைப்பார்கள்.  இதன் வெளிப்பாட்டை நாம் அவர்கள் எடுக்கும் நிறையப் படங்களில் பார்த்தாலும், பொதுவாக அனைவருக்குமே எழும் கேள்வி இந்தப் பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்கிறோமா என்பதுதான்.  அப்படியிருக்க வாய்ப்பேயில்லை என்று பல்வேறு அறிஞர்களும் விஞ்ஞானிகளும் அடித்துச் சொல்கிறார்கள்.  ௲ரியக் குடும்பம் போலவே பல நட்சத்திரங்கள் தங்களுடைய தனிக் குடும்பத்தையும், அதில் சில பூமிக்கு நிகரான தட்பவெப்பம் அல்லது உயிரின வளர்ச்சியைக் கொண்டிருக்கலாம் என்றே அனைவரும் கருதுகிறார்கள். 

வேற்றுக் கிரகவாசிகளின் இருப்பு உண்மையா பொய்யா என ஒரு தரப்பு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, அரசு தரப்போ அவை பொய் என்று உறுதியாகச் சொல்கிறது.  இந்த வேறுபாடு தற்போது உச்சகட்டத்தை எட்டியதன் காரணம், அமெரிக்காவின் விண்கலமான அப்பல்லோ 1 நிலவில் இறங்கிய பிறகு ஏற்பட்டிருக்கக் கூடிய அபரிதமான தொழில்நுட்ப வளர்ச்சி.  தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டதாக நிறையக் கண்டுபிடிப்புகள் இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கிறது. எ.கா. கடவுள் அணு எனப்படும் Gods Particle. 

இருப்பது நிஜமா இல்லையா என விவாதம் நடத்திக் கொண்டே, வேற்றுக்கிரக வாசிகளின் வகைளைப் பற்றியும் எழுதிக் கொண்டிக்கிறார்கள் என்பதுதான் இதில் வேடிக்கையே.  அதிலும் அதிர்ச்சியான அல்லது விந்தையான குறியீடு என்பது இவைகள் தற்போது பூமியில் வசிப்பதாகக் குறிப்பிடுவதுதான்… அவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறோன், எங்கேயாவது கண்டால் உடனடியாக எனக்கு தகவல் தெரிவிக்கவும்.

  1. ஆர்க்ச்௲ரியன்ஸ் – அச்சு அசல் மனிதர்களைப் போலவே தோற்றம் கொண்டவை இவை எனச் சொல்கிறார்கள்.  ஆனால், அதீத வெண்மையுடன், அதீத உயரத்துடனும், வெள்ளைத் தலைமுடியுடன், நல்ல வடிவமைப்புள்ள உடலமைப்பு உள்ளவர்கள் எனச் சொல்கிறார்கள்.  இவர்கள் மக்களோடு மக்களாக வாழ்வதாக நம்பப்படுகிறது.
  2. ரெப்டீலியன்ஸ் – ரெப்டீலியன்ஸ் என்ற பெயர் ரெப்டைல் அதாவது ஊர்வன விலங்குகள் என்ற அடிப்படையில் பெயரிடப்பட்டது.  இவை முகம் வேறு விதமான அமைப்புடன் (பாம்பு. பல்லி போல) மிகத் தடிமனான, செதில் செதிலான தோலுடன் இருப்பதால் மக்களோடு ஒன்றிப் பழகாமல் பூமிக்கடியில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறது.
  3. ட்ரைபாட்ஸ் – ட்ரைபாட்ஸ் என்றால் மூன்று காலுள்ள விலங்கினம். இவை மனிதனை விட அதீத தொழில்நுட்பத்தினைப் பெற்றதாகக் கருதப்படுகிறது. இவற்றின் இருப்பிடம் குறித்து தெளிவான எந்தக் குறிப்பிடத்தகுந்த பதிவுகளும் காணப்படவில்லை.
  4. க்ரே – க்ரே என்று செல்லமாக அழைக்கப்படும் இதன் உருவ அமைப்பு நாம் வழக்கமாகக் காணும் ஏலியன் படங்களில் நிறைந்திருக்கும். ஒல்லி உடல்வாகுடன், பெரிய கண்கள் மற்றும் தலை கொண்டதாகச் சொல்லப்படுகிறது. வாய் சிறிய துவாரம் போல அல்லது இல்லாமல் கூட இருப்பதாகச் சொல்கிறார்கள்.  காரணம் இதன் தலையின் அமைப்பை வைத்துப் பார்க்கையில், அனைத்தையும் மனதினாலேயே கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் உடையதாகக் கருதப்படுகிறது.  அதனாலேயே உடல் ஒல்லியாக இருப்பதாக நம்பப்படுகிறது.

 

 

இதையெல்லாம் விடக் கொடுமை, இப்பொழுது மொத்தம் 10 விதமான வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி வருவதுதான். எது எப்படியோ எவால்யுவேஷன் தியரிப்படி “வலிமையானதே வெல்லும்”.  வருபவர்கள் நம்மை விட எதில் வலிமையானவர்களாக இருப்பினும், நம் கதி கொலம்பஸ் தரையிறங்கிய பின் மேற்கு இந்தியர்களின் கதிக்கும், வாஸ்கோ டகாமா கேரளாவில் தரையிறங்கிய பின்னர் மலையாளத்தாரின் கதிக்கும் சற்றும் குறைவாக இருக்காது என அஞ்சத்தான் வேண்டியுள்ளது.

 

 

 

Top