Misc

வீட்டுக்கு முன்னாடி முருங்கை மரம் வைக்கக்கூடாது என முன்னோர்கள் ஏன் சொன்னாங்க தெரியுமா? பேய் கதையெல்லாம் சொல்லி நம்மள இப்படி ஏமாத்தி வச்சுருக்காங்களே!

Jun 09 2021 05:55:00 PM

முருங்கை ஒரு மூலிகை மரத்தை போன்றது. இதன் இலைகளில் இருந்து காய் வரை அனைத்தும் மக்களுக்கு உதவிகரமாக இருக்கிறது. அதுவும் ஆ ண்மையை தூண்டிவிடுவதில் முருங்கைக்கு இணை இந்த உலகத்தில் எதுவும் கிடையாது. நமக்கு இத்தனை நன்மைகளை வழங்கும் முருங்கை மரத்தை வீட்டின் முன் புறங்களில் வளர்க்கக்கூடாது என நம் முன்னோர்கள் சொல்ல காரணம் என்ன?

murungai maram house

முருங்கை மரத்தின் வேர் வீட்டின் அஸ்திவாரத்தை பதம்பார்க்கும் தன்மை கொண்டது. அதேபோல லேசான காற்று அடித்தாலும் முருங்கை தாவு உடைந்து விழுந்து விடும். சொந்த பந்தங்கள் யாராவது வீட்டுக்கு வந்தவுடன் வீட்டின் முன்புறத்தில் இந்த மரத்தை பார்த்தால் சிலர் அ பச குணமாக நினைப்பார்கள்.

murungai maram house

குளிர் காலங்களில் இந்த முருங்கை மரத்தில் நிறைய கம்பளிப் பூச்சிகள் உருவாகும். வீட்டில் சின்ன குழந்தைகள் இருந்தாலோ அல்லது துணி வீட்டின் வெளியே காயவைத்திருந்தாலோ அந்த கம்பளி பூச்சிகள் சட்டைக்குள் ஏறிவிடும். இதனால் தான் வீட்டின் முன்புறங்களில் முருங்கை மரத்தை வைக்கக்கூடாது என்று நம்ம முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். மற்றபடி முருங்கை மரத்தில் பேய் இருக்கும், அது நம்மள வந்து புடிச்சுக்கும் என்று சொல்வதெல்லாம் வெறும் கட்டுக்கதை தான். உங்களுக்கு முருங்கை மரம் வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் வீட்டின் பின்புறத்தில் வைத்துக்கொள்ளலாம்.

murungai maram house